Close Menu
    What's Hot

    தகிக்கும் வெப்பம்… தப்பிக்கும் பருவமழை… ஆய்வாளர்கள் சொல்வது என்ன?

    TNPSC: குரூப்-1 தேர்வுக்கான விண்ணப்ப தேதி அறிவிப்பு! வயது வரம்பு விவரம்

    ”அந்த பட்டியலை வெளியிடட்டுமா?” – அமைச்சர் நிர்மல் குமாருக்கு நயினார் கேள்வி

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»இந்தியா»இந்தியாவுக்கு வந்த கப்பல் சீனா திரும்பியது ஏன்?. மத்திய அரசு விளக்கம்!
    இந்தியா

    இந்தியாவுக்கு வந்த கப்பல் சீனா திரும்பியது ஏன்?. மத்திய அரசு விளக்கம்!

    Editor web3By Editor web3April 4, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    iran ship india return to china issue
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    இந்தியா வர வேண்டிய ஈரானிய கச்சா எண்ணெய் ஏற்றிய கப்பல், பணப் பரிமாற்றச் சிக்கல் காரணமாக பாதியிலேயே திசை மாறி சீனாவுக்குச் சென்றதாக வெளியான செய்திகளை மத்திய அரசு மறுத்துள்ளது.

    இது குறித்து விளக்கம் அளித்துள்ள மத்திய பெட்ரோலிய அமைச்சகம், இந்தியா கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதில் எந்தவிதமான பணப் பரிமாற்றச் சிக்கல்களையும் எதிர்கொள்ளவில்லை. சர்வதேச எண்ணெய் வர்த்தகத்தின் நடைமுறைகளைப் புரிந்து கொள்ளாமல் இத்தகைய தவறான செய்திகள் பரப்பப்படுகின்றன. கப்பல்கள் பயணத்தின் போது தங்களின் செயல்பாட்டு சுதந்திரத்தின் அடிப்படையில் இலக்குகளை மாற்றுவது இயல்பானது” என்று தெரிவித்துள்ளது.

    முன்னதாக, ‘பிங் ஷுன்’ (Ping Shun) என்ற அஃப்ராமக்ஸ் வகை டேங்கர் கப்பல் குஜராத்தின் வாடினார் துறைமுகத்திற்கு வருவதற்குப் பதிலாக, சீனாவின் டோங்யிங் நோக்கிச் சென்றதாகக் கப்பல் கண்காணிப்பு நிறுவனமான ‘கேப்லர்’ (Kapler) தெரிவித்திருந்தது. அமெரிக்கத் தடைகள் தற்காலிகமாகத் தளர்த்தப்பட்டதைத் தொடர்ந்து, இந்திய சுத்திகரிப்பு நிறுவனங்கள் ஈரானிய எண்ணெயை வாங்குவது குறித்துப் பரிசீலித்து வருகின்றன. இந்தச் சூழலில், பணப் பரிமாற்ற நிபந்தனைகளே கப்பல் திசை மாறக் காரணம் எனச் சில ஆய்வாளர்கள் கருத்துத் தெரிவித்திருந்தனர். ஆனால், “அடுத்த சில மாதங்களுக்கான இந்தியாவின் கச்சா எண்ணெய் தேவை முழுமையாக உறுதி செய்யப்பட்டுள்ளது” என அரசு தெளிவுபடுத்தியுள்ளது.

    மேலும், எல்பிஜி (LPG) எரிவாயு விநியோகம் குறித்த வதந்திகளுக்கும் அரசு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. ‘சீ பேர்ட்’ (Sea Bird) என்ற கப்பல் சுமார் 44,000 மெட்ரிக் டன் ஈரானிய எரிவாயுவுடன் ஏப்ரல் 2-ம் தேதி மங்களூரு துறைமுகத்தை வந்தடைந்துள்ளதாகவும், தற்போது அங்கு எரிவாயு இறக்கும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் அமைச்சகம் தெரிவித்துள்ளது. ரஷ்யாவின் ரோஸ்நெப்ட் ஆதரவு பெற்ற நயாரா எனர்ஜி போன்ற நிறுவனங்கள் தொழில்நுட்ப மற்றும் வணிக ரீதியான சாத்தியக்கூறுகளின் அடிப்படையில் எண்ணெய் கொள்முதல் குறித்து முடிவெடுக்கும் என்றும், இதில் நிதிச் சிக்கல்கள் ஏதுமில்லை என்றும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஇந்தியாவுக்கு கூடுதல் கச்சா எண்ணெய் விநியோகிக்க தயார்!. ரஷ்யா உறுதி!
    Next Article தவெக வேட்பாளர் குடும்பத்துடன் தற்கொலை முயற்சி!. விஜய் அதிர்ச்சி!
    Editor web3
    • Website

    Related Posts

    தகிக்கும் வெப்பம்… தப்பிக்கும் பருவமழை… ஆய்வாளர்கள் சொல்வது என்ன?

    June 23, 2026

    விஜய் அமிர்தராஜ், மம்மூட்டி, மாதவன் உள்பட 65 பேருக்கு பத்ம விருதுகள்; குடியரசுத் தலைவர் வழங்கினார்

    June 23, 2026

    25 ஆண்டுகால திரைப்பயணம்!. பத்மஸ்ரீ விருதை பெற்றார் நடிகர் மாதவன்!

    June 23, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    தகிக்கும் வெப்பம்… தப்பிக்கும் பருவமழை… ஆய்வாளர்கள் சொல்வது என்ன?

    TNPSC: குரூப்-1 தேர்வுக்கான விண்ணப்ப தேதி அறிவிப்பு! வயது வரம்பு விவரம்

    ”அந்த பட்டியலை வெளியிடட்டுமா?” – அமைச்சர் நிர்மல் குமாருக்கு நயினார் கேள்வி

    “ஓலைப்பாயில் தண்ணீர் ஊற்றியதுபோல உதயநிதி பேசக்கூடாது?”  – தவெக விளாசல்

    அறிமுகமான இதே நாளில் ‘பத்மஸ்ரீ’ விருது!. இரட்டிப்பு மகிழ்ச்சியில் ஹிட்மேன் ரோஹித் சர்மா!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.