இந்தியாவிலிருந்து பிலிப்பைன்ஸ்க்கு நேரடி விமான சேவை இயக்கப்பட இருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
பிலிப்பைன்ஸ் குடியரசுத் தலைவர் பெரிண்டோ மார்கஸ் 5 நாட்கள் அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ளார். தனி விமானம் மூலம் டெல்லி வந்த மார்கசை இந்திய அதிகாரிகள் வரவேற்று, குடியரசு மாளிகைக்கு அழைத்து வந்தனர்.
அங்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை சந்தித்த மார்கஸ், தொடர்ந்து பிரதமர் மோடியை சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தினார். இந்த சந்திப்பில் போது கலாச்சாரம், பாதுகாப்பு, விண்வெஇ உள்ளிட்ட பல்வேறு துறைகளில் 9 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.
இந்த சந்திப்பின் பின் பேசிய பிரதமர் மோடி, இந்தியாவிற்கும், பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவிற்கும் இடையே நேரடி விமான சேவை தொடங்கப்படும் என அறிவித்தார்.