Close Menu
    What's Hot

    ‘வீடு லீஸ்’ எனக்கூறி பல கோடி மோசடி!- போலீஸ் அலட்சியம் காட்டியதாக மக்கள் புகார்!

    இந்திய அணிக்கு எதிராக 2வது அதிவேக சதம்! ஆப்., வீரர் குர்பாஸ் புதிய சாதனை

    24 மணி நேரத்தில் அமெ. – ஈரான் இடையே அமைதி ஒப்பந்தம்!- பாகிஸ்தான் நம்பிக்கை

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»அரசியல்»விஜய்யிடம் என்ன மாறுபட்ட கொள்கை உள்ளது? சீமான் கேள்வி…
    அரசியல்

    விஜய்யிடம் என்ன மாறுபட்ட கொள்கை உள்ளது? சீமான் கேள்வி…

    Editor TN TalksBy Editor TN TalksAugust 5, 2025No Comments2 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    10 2
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    விஜய்யிடம் என்ன மாறுபட்ட கொள்கை உள்ளது என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

    மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ”தமிழகத்தை மீட்போம், ஓரணியில் திரள்வோம் என்று சொல்கிறார்கள். தமிழகத்தை யாரிடம் அடமானத்தில் வைத்திருந்தார்கள்?. ஓரணியில் எதற்கு திரள வேண்டும்? நீட் தேர்வை ரத்து செய்வதற்கா? ஜி.எஸ்.டி. வரியை எதிர்ப்பதற்கா? தொகுதி மறுவரை என்ற பெயரில் தொகுதியை சீரழித்ததே கருணாநிதி தான். தேர்தல் வரும்போது பாசம், வேஷம் போட்டு நடிப்பார்கள்.

    எனக்கு வயிற்றுப்பசி இல்லை. எனக்கு இருப்பது சுதந்திரப் பசி. சட்டமன்றத்தில் என் குரல் ஒலிக்க வேண்டும் என்றால் மக்கள் எனக்கு வாக்களித்து அனுப்ப வேண்டும். தற்காலிக தோல்விக்காக நான் நிரந்தர வெற்றியை இழக்க விரும்பவில்லை. நான் நம்பர் ஒன் பார்ட்டியாக வேண்டியவன்.

    எந்த சித்தாந்தத்தை காப்பாற்ற நீங்கள் அனைவரும் கட்சியை ஆரம்பித்தீர்கள். என்னை விட்டு விடுங்கள். யார் அடித்தாலும் தாங்குவதற்கு ஒருவர் வேண்டும். எனவே என்னை விட்டு விடுங்கள் 2026ல் எந்தக் கட்சி ஆட்சி செய்ய வேண்டும், எந்த கட்சியை வீழ்த்த வேண்டும் என்பது மக்கள் முடிவு செய்வார்கள். திமுக வரவேண்டும் என்று யாரும் வாக்கு செலுத்துவதில்லை. திமுக தீய ஆட்சி என்பதை ஒத்துக் கொள்ள வேண்டும், அதை ஒழிக்க வேண்டும். திமுகவை எவ்வாறு அதிமுகவை வைத்து ஒழிக்க முடியும்.

    அண்ணா வழியில் என விஜய் கூறுகிறார், அண்ணா வழியில் தான் 60 ஆண்டுகளாக தி.மு.க. பயணிக்கிறது. அண்ணா வழியில் அல்லாமல் வேறு எந்த வழியில் தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் பயணிக்கிறது.
    அரசியலுக்கு வந்துள்ள விஜய் என்ன மாறுபட்ட கொள்கையை வைத்துள்ளார்? விஜயகாந்த் அரசியலுக்கு வந்த போது ஏற்படாத எழுச்சியா தற்போது ஏற்பட்டுள்ளது. விஜய் போல அவ்வப்போது புதிய கட்சிகள் கிளம்பத்தான் செய்யும்.

    தமிழகத்தில் உள்ள வட இந்தியர்கள் அனைவரும் பாஜகவின் வாக்குகள்தான். பெருந்துறை, கோவை தெற்கில் வட இந்தியர்கள் வாக்களித்தால் வெற்றி என்ற நிலை உள்ளது. தமிழகத்தை இந்தி பேசும் இன்னொரு மாநிலமாக்க முயற்சி நடக்கிறது. வட இந்தியர்களுக்கு தமிழகத்தில் வாக்குரிமை தரக்கூடாது. நான் இருக்கும் வரை அது நடக்காது” எனக் கூறினார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Article14-ம் தேதி கூடும் தமிழக அமைச்சரவைக் கூட்டம்… முக்கிய திட்டங்கள் குறித்து விவாதிக்க வாய்ப்பு…
    Next Article இந்தியா – பிலிப்பைன்ஸ்… நேரடி விமான சேவை… பிரதமர் மோடி அறிவிப்பு…
    Editor TN Talks

    Related Posts

    பாஜகவின் ஜெராக்ஸ்; காய்ந்துபோன சக்தி; மிஸ்டர் சீப் மினிஸ்டர் – கலாய்த்த மு.க.ஸ்டாலின்!

    June 13, 2026

    மத்திய அரசின் தேர்வு முறைகேடுகளுக்கு எதிராக மாணவர் மாநாடு – ஜூன் 17-இல் ராகுல்காந்தி தொடங்கி வைக்கிறார்

    June 13, 2026

    70 ஆண்டாக வைகை அணை தூர் வாரப்படவில்லை – அமைச்சர் நிர்மல்குமார் ஆய்வு

    June 13, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ‘வீடு லீஸ்’ எனக்கூறி பல கோடி மோசடி!- போலீஸ் அலட்சியம் காட்டியதாக மக்கள் புகார்!

    இந்திய அணிக்கு எதிராக 2வது அதிவேக சதம்! ஆப்., வீரர் குர்பாஸ் புதிய சாதனை

    24 மணி நேரத்தில் அமெ. – ஈரான் இடையே அமைதி ஒப்பந்தம்!- பாகிஸ்தான் நம்பிக்கை

    நடிகர் ஜீவாவின் புதிய பட அப்டேட்!

    ‘எல்லாம் இனிதே’!- ‘சேயோன்’ புதிய புகைப்படம் வெளியீடு!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.