திமுக ராஜ்யசபா வேட்பாளர்கள் வில்சன், எஸ்.ஆர்.சிவலிங்கம், சல்மா ஆகியோர் மற்றும் அதிமுக வேட்பாளர்கள் இன்பதுரை, தனபால் ஆகியோர் ஜூன் 6 ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளனர்.

மாநிலங்களவை தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் கடந்த ஜூன் இரண்டாம் தேதி முதல் வரும் ஒன்பதாம் தேதி வரையிலும் நடைபெற உள்ளது.

இந்த நிலையில் வரும் 6 ஆம் தேதி திமுக அதிமுக வேட்பாளர்கள் ஒரே நாளில் வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளனர். திமுக வேட்பு மனு தாக்கல் வெள்ளிக்கிழமை நடைபெறும்.

வேட்பு மனுவில் (முன்மொழிய) கையெழுத்து போட எம் எல் ஏ க்கள் இன்று அண்ணா அறிவாலயம் செல்கிறார்கள். ஒரு மனுவுக்கு 10 எம் எல் ஏ க்கள் கையெழுத்து போடுகிறார்கள்.

விரைவில் காலியாக உள்ள 6 இடங்களுக்கு திமுக சார்பில் 4 பேர், அதிமுக சார்பில் 2 பேர் என்று மொத்தம் 6 பேர் மட்டுமே வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளதால், வேறு யாரும் வேட்புமனு தாக்கல் செய்யாத பட்சத்தில் 6 பேரும் போட்டியின்றி தேர்வு செய்யப்படுவார்கள்.

திமுக சார்பில் பி.வில்சன், கவிஞர் சல்மா, எஸ்.ஆர்.சிவலிங்கம், திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். அதிமுக சார்பில் அக்கட்சியின் வழக்கறிஞர் பிரிவு செயலாளர் இன்பதுரை, முன்னாள் எம்எல்ஏ தனபால் ஆகியோர் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version