கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் காட்டு யானை தாக்கி முதியவர் படுகாயம்.
கேரள மாநிலம் இடுக்கி வண்டிப் பெரியாறு அருகே காட்டு யானை தாக்கியதில் முதியவர் பலத்த காயமடைந்தார்.பனிமூட்டத்தால் யானை அருகில் இருந்து தெரியவில்லை என கூறப்படுகிறது.
தமிழக -கேரள எல்லையை இணைக்கும் கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் வண்டிப்பெரியாறு அருகே மவுண்ட் எஸ்டேட்டை சேர்ந்தவர் 62 வயது நிரம்பிய அந்தோணி.
கூலித் தொழிலாளியான அந்தோணி, காப்பி தோட்டத்தில் களை எடுத்துக் கொண்டிருந்த போது, புதருக்குள் இருந்த காட்டு யானை துதிக்கையால் தாக்கியது.
இதில், தலை, மார்பு பகுதி, கால் ஆகியவற்றில் பலத்த காயமடைந்த அவர், வண்டிப்பெரியாறு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டார்.அங்கு முதலுதவி அளிக்கப்பட்டதும், அந்தோணி மேல் சிசிச்சைக்காக கோட்டயம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
பனி மூட்டத்தால் யானை புதருக்குள் இருந்தது தெரியவில்லை என கூறப்படுகிறது. குறித்து வண்டிப் பெரியாறு காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்….