ஜார்கண்ட் மாநிலத்தில் முன்னாள் முதலமைச்சர் ஷிபு சோரன் உடல்நலக் குறைவால் காலமானார்.

ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் நிறுவனர் ஷிபு சோரன். இவர் தற்போதைய ஜார்கண்ட் முதலமைச்சரான ஹேமந்த் சோரன்ன் தந்தை ஆவார். இவர் சுமார் 3 முறை ஜார்கண்ட் மாநிலத்தின் முதலமைச்சராக இருந்தவர்.

81 வயதான ஷிபு சோரன், கிட்னி தொடர்பான பிரச்னை காரணமாக கடந்த ஜூன் 24-ம் தேதி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஒரு மாதத்திற்கு மேல் சிகிச்சை பெற்று வந்த ஷிபு சோரன், இன்று காலை 8.56 மணிக்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவுக்கு அரசியல் கட்சியினர் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில், ஷிபு சோரனின் இறுதிச்சடங்கு ஜார்கண்டில் நடைபெறவுள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version