தென்னாப்பிரிக்காவில் நடைபெறும் ஜி 20 உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக 3 நாட்கள் பயணமாக பிரதமர் மோடி டெல்லியில் இருந்து புறப்பட்டார்.

தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கில் இன்று (நவ. 21) முதல் வரும் 23ம் தேதி வரை ஜி 20 நாட்டு தலைவர்கள் பங்கேற்கும் உச்சி மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.

இதற்காக இன்று (நவ. 21) காலை டெல்லியில் இருந்து தென்னாப்பிரிக்காவுக்கு பிரதமர் மோடி புறப்பட்டுச் சென்றார். இதுதொடர்பாக தனது x தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கில் நடைபெறும் ஜி20 உச்சி மாநாட்டு, மிகவும் சிறப்பு வாய்ந்த உச்சி மாநாடு என்று குறிப்பிட்டுள்ளார். பல்வேறு உலகளாவிய பிரச்னைகள் குறித்து மாநாட்டில் விவாதிக்கப்படும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். உச்சிமாநாட்டின் போது பல்வேறு உலகத் தலைவர்களைச் சந்தித்து பேச இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜி 20 உச்சிமாநாட்டில் நடைபெறும் முக்கிய 3 அமர்வுகளில் பிரதமர் மோடி பங்கேற்று உரையாற்ற உள்ளார். அதில், காலநிலை மாற்றம், எரிசக்தி உள்ளிட்டவை குறித்து பிரதமர் முக்கிய உரையாற்ற உள்ளார். மேலும், இந்தியா, பிரேசில், தென்னாப்பிரிக்கா நாட்டுத் தலைவர்களின் கூட்டத்திலும் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தென்னாப்பிரிக்காவில் பழங்குடியினருக்கு எதிராக நடைபெறும் அத்துமீறல்களை கண்டித்து, ஜ 20 மாநாட்டை புறக்கணிப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version