ஆந்திர மாநிலம் திருப்பதி திருமலையில் உள்ள ஏழுமலையானை தரிசிக்க உலகம் முழுவதும் பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். உலக பணக்கார கடவுள் என அழைக்கப்படும் ஏழுமலையான் உலக பிரசித்தி பெற்றது. வெளி மாநிலங்கள் மட்டுமின்றி, வெளி நாடுகளில் இருந்தும் பக்தர்கள் ஏழுமலையானை கால் கடுக்க நின்று தரிசனம் செய்து வருகின்றனர். ரூ.300 சிறப்பு தரிசனம், விஐபி தரிசனம் உள்ளிட்டவற்றின் மூலம் பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர்.
குறிப்பாக, வைகுண்ட ஏகாதசி நாளில் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆண்டுதோறும் வெகு விமர்சையாக சொர்க்க வாசல் திறப்பு நடைபெறக் கூடும். சொர்க்க வாசல் நாளில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள். வைகுண்ட ஏகாதசி நாளில் உத்தார துவாரம் எனும் சொர்க்க வாசல் வழியாக பக்தர்கள் கோயிலுக்குள் அனுமதிக்கப்பட்டு தரிசனம் மேற்கொண்டு வருகின்றனர்.
வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, ஏழுமலையானை தரிசிப்பதால் புண்ணியம் கிடைக்கும் என நம்பப்படுகிறது. இதனால், அந்த நாளில் பக்தர்கள் ஏழுமலையானை தரிசிக்க வருகின்றனர். இந்தநிலையில் இன்று முதல் வரும் 8ம் தேதி வரை நேரடி இலவச தரிசனத்தீற்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படுகிறது. முன்பதிவு டோக்கன் இல்லாமலேயே நேரடியாக வந்து சொர்க்கவாசல் வழியாக ஏழுமலையானை பக்தர்கள் தரிசிக்கலாம். இலவச தரிசனம் என்பதால், நேற்று முதலே பக்தர்கள் கூட்டம் கட்டுக்கடங்காமல் திருப்பதியை நோக்கி படையெடுக்க தொடங்கியுள்ளது.
