கடந்த சில நாட்களாக சரிவில் இருந்த தங்கம் விலை, இன்று மீண்டும் உச்சத்தை எட்டி ஒரு லட்சத்தை தாண்டியுள்ளது.

சர்வதேச அளவில் தங்கம், வெள்ளியில் முதலீட்டாளர்களும், பிற நாடுகளும், அதிக அளவில் முதலீடு செய்வதால், அவற்றின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால், நம் நாட்டிலும் தங்கம், வெள்ளி விலை, தினமும் புதிய உச்சத்தை எட்டி வருகிறது. தமிழகத்தில் நேற்று (ஜன.1)ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.99,520 விற்பனை ஆனது.

ஒரு கிராம் 12 ஆயிரத்து 440 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. வெள்ளி விலை  ஒரு கிராம் 256 ரூபாய்க்கு விற்பனை ஆனது.  ஒரு கிலோ 2 லட்சத்து 56 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில் இன்று (ஜன.2) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 1,120 ரூபாய்ந்து உயர்ந்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 640 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. கிராமுக்கு 140 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் 12 ஆயிரத்து 580 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை கிராமுக்கு 4 ரூபாய் உயர்ந்து, ஒரு கிராம் 260 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. கிலோவுக்கு 4 ஆயரம் ரூபாய் உயர்ந்து ஒரு கிலோ 2 லட்சத்து 60 ஆயிரத்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version