நாட்டின் ஜூலை மாதத்திற்கான ஜி.எஸ்.டி வசூல் ரூ.1.96லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. இது கடந்தாண்டு ஜூலை மாத வசூலை விட 7.5% அதிகமாகும்.

இது தொடர்பாக மத்திய அரசு வெளியிட்ட அறிக்கையில், கடந்த ஜூலை மாதம் ஜிஎஸ்டி மூலம் ரூ.1,95,735 கோடி வசூல் ஆகி உள்ளது. இதன் மூலம் தொடர்ச்சியாக 7 மாதமாக ஜிஎஸ்டி வசூல் ரூ.1.8 லட்சம் கோடியை தாண்டி உள்ளது. கடந்த ஆண்டு ஏப்ரல் – ஜூலை மாத்தை விட இந்த ஆண்டு அதே காலகட்டத்தில் ஜிஎஸ்டி வருமானம் 10.7 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்தாண்டு 3 மாதத்தில் மட்டும் ரூ.8,18,009 கோடி கிடைத்துள்ளது.

2025ம் ஆண்டு ஜூன் மாதத்துக்கான நாட்டின் ஜி.எஸ்.டி., வசூல் 6.20 சதவீதம் உயர்ந்து, 1.84 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்தது குறிப்பிடத்தக்கது. ஜிஎஸ்டி வரலாற்றில், கடந்த ஏப்ரல் அதிகபட்சமாக ரூ.2.37 லட்சம் கோடி வசூலாகி சாதனை படைத்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version