ஒடிசா மாநிலம் புரியில் உள்ள ஜெகநாதர் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது. ஆண்டுதோறும் ஜெகநாதர் கோயிலுக்கு ரத யாத்திரை கோலாகலமாக நடைபெறும். புரி ஜெகநாதர் கோயிலைப் போன்றே, குஜராத் மாநிலம் ஆமதாபாத்திலும் ஜெகநாதர் கோயில் உள்ளது. இக்கோயிலுக்கும் ரத யாத்திரை நடைபெற்றது. 400 ஆண்டுகள் பழமையான இக்கோயிலில் நடைபெற்ற ரத யாத்திரையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
18 யானைகள், 100 வாகனங்களை கொண்டு ரதமானது இழுத்து செல்லப்பட்டது. மேற்கொண்டு பக்தர்களும் வடத்தை பிடித்து இழுத்து சென்றனர். இந்த ரத யாத்திரையில் உள்துறை அமைச்சர்
அமித்ஷா தனது குடும்பத்துடன் கலந்து கொண்டார். அதேப் போல் இந்த நிகழ்ச்சியில் குஜராத் முதலமைச்சர் பூபேந்திர படேலும் தனது குடும்பத்துடன் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்.