ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டு கூட்டுஅறிக்கையில் கையெழுத்திட இந்தியா மறுப்பு தெரிவித்துள்ளது.
சீனாவில் நடைபெறும் ஹாங்காங் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாட்டின் கூட்டு அறிக்கையில் பஹல்காம் தாக்குதல் குறித்து கண்டிக்காததற்கு மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
ஹாங்காங் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாட்டில், சீனா, பாகிஸ்தான், ரஷியா, ஈரான் உள்பட 10 நாடுகளின் பாதுகாப்புத் துறை அமைச்சர்கள் பங்கேற்று உரையாற்றினர்.
இதில் பேசிய ராஜ்நாத் சிங், பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் குறித்தும் ஆபரேஷன் சிந்தூர் குறித்தும் விளக்கம் அளித்தார். மேலும், பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் அளிக்கும் எந்த நாட்டையும் வெளிப்படையாக எஸ்சிஓ விமர்சிக்க வேண்டும் எனத் தெரிவித்திருந்தார். இந்த நிலையில், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் கூட்டறிக்கையில், பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் குறித்து குறிப்பிடாததாலும், பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் வலுவான நிலைப்பாட்டை அறிக்கை பிரதிபலிக்கவில்லை எனக் கூறியும் கையெழுத்திட ராஜ்நாத் சிங் மறுத்துவிட்டார்.
மேலும், அந்த அறிக்கையில், பலுசிஸ்தான் பிரச்னையைக் குறிப்பிட்டு, அப்பகுதியில் இந்தியா அமைதியின்மையை உருவாக்குவதாக மறைமுகமாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ளதால் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. பலுசிஸ்தான் சுதந்திரப் போராட்டத்துக்கும் இந்தியாவுக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என்று பாகிஸ்தானின் குற்றச்சாட்டு மத்திய அரசு ஏற்கெனவே விளக்கம் அளித்துள்ளது.
