வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மூன்று நாள் பயணமாக இன்று அமெரிக்கா செல்கிறார்.
நாளை நடைபெற உள்ள குவாட் வெளியுறவு அமைச்சர்கள் மாநாட்டில் அவர் பங்கேற்கிறார்
அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோவின் அழைப்பின் பேரில், வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் இன்று முதல் அமெரிக்காவிற்கு மூன்று நாள் அதிகாரப்பூர்வ பயணத்தை மேற்கொள்கிறார். சுதந்திரமான மற்றும் திறந்த இந்தோ-பசிபிக் பகுதிக்கான பொதுவான பார்வையை முன்னெடுப்பதற்கான புதிய திட்டங்களில் குவாட் குழு கவனம் செலுத்தும் என்று வெளியுறவு அமைச்சகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இதையும் படிக்க: குடியரத் தலைவர் முர்மு உ.பி பயணம்.. பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்கிறார்!
நியூயார்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்தில் ஒரு கண்காட்சியையும் அமைச்சர் ஜெய்சங்கர் தொடங்கி வைக்க உள்ளார். உலகளாவிய பயங்கரவாத செயல்களின் பேரழிவு தாக்குதலையும், பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராட சர்வதேச சமூகம் எடுத்த நடவடிக்கைகளையும் இந்தக் கண்காட்சி எடுத்துக்காட்ட உள்ளது.