மக்கள் அன்றாடம் சந்திக்கும் இடர்களை குறைப்பதே சீர்திருத்தம் என்றும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
இண்டிகோ நெருக்கடி காரணமாக கடந்த ஒரு வாரமாக ஆயிரக்கணக்கான விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. இதனால் பயணிகள் அவதிக்குள்ளாயினர். இதையடுத்து, புதிய விதிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.
இந்தநிலையில் டெல்லியில் நேற்று தேசிய ஜனநாயகக் கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது.
ப்போது, சமீபத்தில் முடிவடைந்த பீகார் சட்டமன்றத் தேர்தலில் கூட்டணியின் வெற்றிக்காக தேசிய ஜனநாயகக் கூட்டணி எம்.பி.க்கள் மற்றும் தலைவர்கள் பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்தனர். இந்த தேர்தலில் முதல்வர் நிதிஷ் குமார் 10வது முறையாகப் பதவியேற்றார். சட்டங்கள் குடிமக்களுக்கு சுமையாக இல்லாமல், அவர்களின் வசதியை மேம்படுத்த வேண்டும் என்று பிரதமர் மோடி வலியுறுத்தியதாக நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.
கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய கிரண் ரிஜிஜு, விதிகளும் சட்டங்களும் நல்லதுதான், ஆனால் அமைப்பை சரிசெய்ய மக்களைத் துன்புறுத்துவது சரியல்ல”. அதாவது, இண்டிகோ விமான சேவையில் ஏற்பட்ட குளறுபடி குறித்து கவலை தெரிவித்த பிரதமர் மோடி, மக்களின் வாழ்க்கையை எளிதாக்கவும் அவர்கள் பிரச்சினையின்றி வாழ்வதை உறுதி செய்யவும் அனைத்து துறைகளிலும் சீர்திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டியது அவசியம் என்று பிரதமர் வலியுறுத்தியதாக குறிப்பிட்டார்.
மேலும், “சீர்திருத்தங்கள் பொருளாதாரம் அல்லது வருவாயை மையமாகக் கொண்டதாக இல்லாமல், குடிமக்களை மையமாகக் கொண்டதாக இருக்க வேண்டும் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். மக்கள் தங்கள் முழு திறனுக்கும் வளர, அன்றாடம் ஏற்படும் தடைகளை நீக்குவதே இலக்காக இருக்க வேண்டும்,” என்றும் சீர்திருத்தங்களை மாற்றியமைக்க குடிமக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைப் பகிர்ந்து கொள்ளுமாறு எம்.பி.க்களுக்கு பிரதமர் அறிவுறுத்தியதாக, கூட்டத்தில் கலந்துகொண்ட வட்டாரங்கள் தெரிவித்தன.
மேலும், அரசு திட்டங்களை மக்கள் பெறூவது எளிதாக்கப்பட வேண்டும் எனவும், இதற்காக நடைபெறும் நீண்ட 30-40 பக்க படிவங்கள் மற்றும் தேவையற்ற Paperwork முறையை முடிவுக்கு கொண்டுவரவேண்டும் என்றும் பிரதமர் கூறியுள்ளார்.
