ரூ.50 இலட்சம் வரை பரிசுத் தொகையை வெல்வதற்கான அரிய வாய்ப்பினை மத்திய கலாச்சார அமைச்சகம் அறிவித்துள்ளது.
மத்திய கலாச்சார அமைச்சகம் சார்பில் ‘வந்தே மாதரம் ஃப்ரேம்ஸ்’ தேசிய திரைப்பட உருவாக்கப் போட்டி அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த போட்டி, நமது தேசியப் பாடலின் உணர்வை உங்கள் படைப்பாற்றலால் உயிர்ப்பிக்க ஒரு அரிய வாய்ப்பாகும்.
ரீல்ஸ், ஏ.ஐ. பிலிம் குறும்படம் என மூன்று பிரிவுகளில் இந்தப் போட்டி நடத்தப்படுகிறது. ஒவ்வொரு பிரிவிலும் மூன்று பரிசுகள் வழங்கப்படுகிறது.
ரீல்ஸ் பிரிவில் ஒன்றரை லட்சம் ரூபாய் வரையும், ஏ.ஐ. பிலிம் உருவாக்கத்தில் ரூ.5இலட்சம் வரையும், குறும்படத் தயாரிப்பில் 15 இலட்சம் ரூபாய் வரையும் என மொத்தம் 50 இலட்சம் ரூபாய்க் பரிசுத் தொகையாக அறிவிக்கப்பட்டுள்ளது.
15 மற்றும் 15 வயதுக்கு மேற்பட்டோர் இந்தப் படைப்பாற்றல் போட்டியில் பங்கேற்கலாம். தங்களது படைப்புகளை இறுதிநாளான வரும் மே 7ஆம் தேதிக்குள் http://vandemataram150.in என்னும் இணையத்தில் பதிவேற்ற வேண்டும்.

