கூகுள் பே (Google Pay) செயலியில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள ‘GPay Pocket Money’ அல்லது ‘Children Accounts’ எனும் புதிய அம்சம், பெற்றோர் மற்றும் குழந்தைகள் இடையே டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையை எளிதாக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த அம்சம் எவ்வாறு செயல்படுகிறது என்பது குறித்து தெரிந்துகொள்வோம்.
இன்றைய டிஜிட்டல் யுகத்தில் குழந்தைகளுக்குப் பண மேலாண்மை மற்றும் சேமிப்புப் பழக்கத்தைக் கற்றுத் தருவதற்காகக் கூகுள் நிறுவனம் இந்தப் புதிய வசதியைக் கொண்டு வந்துள்ளது. இது குறிப்பாகச் சிறுவர்களுக்காக வடிவமைக்கப்பட்ட ஒரு பாதுகாப்பான தளமாகும்.
அதாவது, குழந்தைகள் தங்களது சிறிய தேவைகளுக்காக Google Pay (GPay) மூலம் நேரடியாக பணம் செலுத்தலாம். ஆனால் அந்தத் தொகை பெற்றோரின் வங்கி கணக்கிலிருந்தே கழிக்கப்படும். மேலும், செலவு வரம்புகள் மற்றும் கட்டுப்பாடுகள் முழுமையாக பெற்றோரின் கட்டுப்பாட்டிலேயே இருக்கும்.
இது எப்படி செயல்படுகிறது? பெற்றோர் கட்டுப்பாடு: குழந்தைகளின் கூகுள் பே கணக்கை அவர்களின் பெற்றோரின் முதன்மைக் கணக்குடன் இணைக்க வேண்டும். இதன் மூலம் குழந்தையின் ஒவ்வொரு செலவையும் பெற்றோரால் கண்காணிக்க முடியும்.
பண வரம்பு (Spending Limits): ஒரு நாளைக்கு அல்லது ஒரு மாதத்திற்குத் தனது குழந்தை எவ்வளவு பணம் செலவு செய்யலாம் என்பதைப் பெற்றோரே நிர்ணயம் செய்ய முடியும். இதனால் தேவையற்ற செலவுகளைத் தவிர்க்கலாம்.
அனுமதி கோருதல்: குழந்தை ஏதேனும் ஒரு கடையிலோ அல்லது ஆன்லைனிலோ பணம் செலுத்த முற்படும்போது, பெற்றோரின் மொபைலுக்கு ஒரு அறிவிப்பு (Notification) வரும். பெற்றோர் அதை அங்கீகரித்தால் மட்டுமே பணப்பரிவர்த்தனை முழுமையடையும்.
பாதுகாப்பு வசதிகள்: இந்த கணக்குகளில் அதிகப்படியான பாதுகாப்புக் கட்டுப்பாடுகள் உள்ளன. குறிப்பாகச் சூதாட்டம் அல்லது வயது வந்தோருக்கான தளங்களில் இந்தப் பணத்தைப் பயன்படுத்த முடியாதபடி கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
Primary user ஆக இருப்பதற்கு, Google Pay ஆப்பில் உங்கள் வங்கி கணக்கு இணைக்கப்பட்டிருக்க வேண்டும். நீங்கள் அதிகபட்சமாக 5 secondary users-ஐ சேர்க்கலாம்.
ஒரு secondary user-ஐ சேர்க்க, கீழ்கண்டவை அவசியம்:
- அவர்களின் மொபைல் எண் உங்கள் contacts-ல் சேமிக்கப்பட்டிருக்க வேண்டும்
- அவர்கள் அந்த same number மூலம் Google Pay-யில் பதிவு செய்திருக்க வேண்டும்
- அவர்களிடம் UPI ID அல்லது UPI Circle QR இருக்க வேண்டும்

