ஜிஎஸ்டி விகிதங்களில் மாற்றங்களை செய்ய மத்திய அரசை தூண்டியது எது என்ன முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

“பல்வேறு பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான ஜிஎஸ்டி வரியை பகுத்தறிவுபடுத்துதல் மற்றும் விகிதங்களைக் குறைத்தல் வரவேற்கத்தக்கது. ஆனால் இது 8 ஆண்டுகாலம் தாமதமாகியுள்ளது.

தற்போதைய ஜிஎஸ்டி வடிவமைப்பு மற்றும் இன்று வரை நடைமுறையில் உள்ள விகிதங்கள் முதலில் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கக்கூடாது. கடந்த 8 ஆண்டுகளாக ஜிஎஸ்டி விகிதங்களுக்கு எதிராக நாங்கள் கடுமையாகக் குரல் கொடுத்து வந்தோம், ஆனால் எங்கள் கோரிக்கைகள் செவிடன் காதில் விழுந்தது போல் இருந்துவிட்டது.

தற்போது இந்த மாற்றங்களைச் செய்ய அரசை தூண்டியது எது? மெதுவான வளர்ச்சியா அல்லது பெருகிவரும் குடும்பக் கடனா அல்லது குறைந்து வரும் குடும்ப சேமிப்பா ? பீகாரில் தேர்தல்? டிரம்ப் வரி விதிப்பு ? மேற்கூறிய அனைத்தும்?” என தெரிவித்துள்ளார்.

Share.
Leave A Reply

Exit mobile version