கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு பிரதமர் மோடி டெல்லியில் உள்ள தேவாலயத்தில் சிறப்பு பிரார்த்தனையில் பங்கேற்றார்.

உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்துவர்கள் இயேசு பிறந்த தினமான கிறிஸ்துமஸ் பண்டிகையை இன்று வெகு விமர்சையாக கொண்டாடி வருகின்றனர். 4ஆம் நூற்றாண்டு முதல் கிறிஸ்துமஸ் கிறிஸ்துவர்களின் பண்டிகையாக அங்கீகரிக்கப்பட்டது. முதன்முதலில் ஐரோப்பா கண்டத்தில் தொடங்கி, பின்னர் உலகம் முழுவதும் கொண்டாட்டங்கள் பரவியது.

கிறிஸ்துமஸ் பண்டிகை இயேசு கிறிஸ்துவின் பிறந்தநாளை குறிப்பதுடன் நம்பிக்கை, அமைதி, மன்னிப்பு, அன்பு ஆகியவற்றை அடிப்படையாக கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் உள்ள தேவாலயங்கள் வண்ண விலக்குகளால் அலங்கரிக்கப்பட்டு சிறப்புப் பிரார்த்தனை நடத்தப்பட்டது.

பெங்களூருவில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்

இந்நிலையில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு பிரதமர் மோடி டெல்லியில் உள்ள தி கதீட்ரல் ஆஃப் ரிடம்ஷன் தேவாலயத்தில் நடைபெற்ற சிறப்பு பிரார்த்தனையில் பங்கேற்றார்.

இதுகுறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “டெல்லியில் உள்ள தி கதீட்ரல் ஆஃப் ரிடம்ஷன் தேவாலயத்தில் இன்று காலை கிறிஸ்துமஸ் சிறப்பு பிரார்த்தனையில் பங்கேற்றேன். சிறப்பு பிரார்த்தனை அன்பு, அமைதி, மற்றும் கருணை ஆகிய காலத்தால் அழியாத செய்தியை பிரதிபலித்தது. இந்த கிறிஸ்துமஸ் பண்டிகை நம் சமூகத்தில் நல்லிணக்கத்தையும் நல்ல எண்ணத்தையும் தூண்டட்டும்” என கூறியுள்ளார். மேலும் தேவாலயத்தில் பிரார்த்தனை மேற்கொண்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பிரதமர் கோடி தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

முன்னதாக நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கம் மூலம் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை தெரிவித்தார். அவரது பதிவில், “அனைவருக்கும் அமைதி, கருணை, மற்றும் நம்பிக்கை நிறைந்த கிறிஸ்துமஸ் பண்டிகை நல்வாழ்த்துக்கள். இயேசு கிறிஸ்துவின் போதனைகள் நமது சமூகத்தில் நல்லிணக்கத்தை வலுப்படுத்தட்டும்” என கூறியுள்ளார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version