Close Menu
    What's Hot

    மீனவர்கள் கைது!. கடிதம் எழுதுவதே போதும் என முதல்வர் எண்ணுகிறாரா?. விஜய் கேள்வி!

    “இப்படியொரு அருவருப்பான கருத்தை எதிர்பார்க்கவில்லை”!. த்ரிஷா பரபரப்பு அறிக்கை!

    வடபழனி விஜயா ஃபோரம் மாலில் திடீர் தீவிபத்து!. ஊழியர்கள், பொதுமக்கள் வெளியேற்றம்!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»இந்தியா»விமானவிபத்து செய்திகளை வெளியிட வரைமுறை கோரி மனு
    இந்தியா

    விமானவிபத்து செய்திகளை வெளியிட வரைமுறை கோரி மனு

    Editor TN TalksBy Editor TN TalksJuly 17, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    images 5
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    விமான விபத்து தொடர்பான செய்திகளை வெளியிடுவது தொடர்பாக ஊடகங்களுக்கு விதிகளை வகுக்கும் படி மத்திய அரசுக்கு உத்தரவிடக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

    குஜராத்தில் மாநிலம் அகமதபாத்தில் இருந்து கடந்த ஜூன் 12 ம் தேதி லண்டனுக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் புறப்பட்ட சில நொடிகளில் கட்டுப்பாட்டை இழந்து மருத்துவக் கல்லூரியின் விடுதி வளாகத்தின் மீது விழுந்து விபத்துக்குள்ளானது.

    இதில் விமானத்தில் பயணித்தவர்களில் 240 நபர்களும், மருத்துவ வளாகத்தில் இருந்த 19 நபர்களும் உயிரிழந்தனர்.  இந்த விபத்துக்கு விமான பைலட் தான் காரணம் என ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளதாகவும் இவ்வாறு ஊடகங்கள் சரிபார்க்கப்படாத, யூகமான, அவதூறான கருத்துகளை பரப்பி வருதாக கூறி கோவையை சேர்ந்த வழக்கறிஞர் பிரவீன் என்பவர் பொது நல வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

    அந்த மனுவில் விமான விபத்து தொடர்பாக விசாரணை நடைபெற்று வரும் நிலையில் ஊடகங்கள் ஆதாரமற்ற வகையில் செய்தி வெளியிடுவது விசாரணையில் பாதிப்பை ஏற்படுத்தும் என குறிப்பிட்டுள்ளார்.

    விமான விபத்திற்கு பைலட் தான் காரணம் என அடிப்படை ஆதாரமற்ற செய்திகளை வெளியிடுவது அந்த விபத்தில் இறந்த பைலட்டுகளை களங்கப்படுத்தும் செயல் எனவும் மனுவில் தெரிவித்துள்ளார்.

    அதனால் விமான விபத்து தொடர்பான செய்திகளை வெளியிடுவது தொடர்பாக ஊடகங்களுக்கு விதிகளை வகுக்கும் படி மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரிக்கை வைத்துள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleபயத்தால் திமுக கூட்டணி கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கிறார் இபிஎஸ்..
    Next Article 1.2 கோடி பேர்களின் ஆதார் எண்களை முடக்கிய மத்திய அரசு.. காரணம் என்ன?
    Editor TN Talks

    Related Posts

    காங்கிரசை ‘கை’ கழுவிய மூத்த தலைவர்!.  அடுத்த விக்கெட் காலி!. தேசிய அளவில் பரபரப்பு!

    February 16, 2026

    SIR பணிகளில் குளறுபடி!. 7 அதிகாரிகள் சஸ்பெண்ட்!. மம்தா பானர்ஜிக்கு ஷாக்!

    February 16, 2026

    ”ஒவ்வொரு ரன் போலதான் ஒவ்வொரு ஓட்டும்”!. இந்தியாவின் வெற்றியை பிரச்சாரமாக மாற்றிய தேர்தல் ஆணையம்!.

    February 16, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    மீனவர்கள் கைது!. கடிதம் எழுதுவதே போதும் என முதல்வர் எண்ணுகிறாரா?. விஜய் கேள்வி!

    “இப்படியொரு அருவருப்பான கருத்தை எதிர்பார்க்கவில்லை”!. த்ரிஷா பரபரப்பு அறிக்கை!

    வடபழனி விஜயா ஃபோரம் மாலில் திடீர் தீவிபத்து!. ஊழியர்கள், பொதுமக்கள் வெளியேற்றம்!

    ”2 அமைச்சர் சீட் கேட்பதில் என்ன தவறு”!. அடுத்தடுத்து கோல் போடும் மாணிக்கம் தாகூர்!. கூட்டணி நீடிக்குமா?

    காங்கிரசை ‘கை’ கழுவிய மூத்த தலைவர்!.  அடுத்த விக்கெட் காலி!. தேசிய அளவில் பரபரப்பு!

    Trending Posts

    “இப்படியொரு அருவருப்பான கருத்தை எதிர்பார்க்கவில்லை”!. த்ரிஷா பரபரப்பு அறிக்கை!

    February 16, 2026

    பெரும் எதிர்பார்ப்பில் பிரான்ஸ் அதிபரின் இந்திய பயணம்!. முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து!.

    February 16, 2026

    மீனவர்கள் கைது!. கடிதம் எழுதுவதே போதும் என முதல்வர் எண்ணுகிறாரா?. விஜய் கேள்வி!

    February 16, 2026

    வடபழனி விஜயா ஃபோரம் மாலில் திடீர் தீவிபத்து!. ஊழியர்கள், பொதுமக்கள் வெளியேற்றம்!

    February 16, 2026

    ”2 அமைச்சர் சீட் கேட்பதில் என்ன தவறு”!. அடுத்தடுத்து கோல் போடும் மாணிக்கம் தாகூர்!. கூட்டணி நீடிக்குமா?

    February 16, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.