Close Menu
    What's Hot

     பாஜக-வின் அதிரடி பிரச்சாரம்!. நாளை ஒரே நாளில் 6 மத்திய அமைச்சர்கள் தமிழகம் வருகை!

    இலவச கார் பயணம், அல்வா, ரூ.1க்கு அரிசி மாவு!. தேர்தல் ஆணையத்தின்  கவர்ச்சி அறிவிப்புகள்!.

    மேலூர் தொகுதியில் விஸ்வநாதன் போட்டி!. காங்கிரஸ் அறிவிப்பு!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»இந்தியா»மக்களை பாதுகாக்க  புதிய இந்தியா தயங்காது!- பிரதமர் மோடி
    இந்தியா

    மக்களை பாதுகாக்க  புதிய இந்தியா தயங்காது!- பிரதமர் மோடி

    Editor TN TalksBy Editor TN TalksNovember 28, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Modi 1
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    அராஜகம் செய்பவர்களை அழிக்க வேண்டியதன் அவசியத்தை கீதை நமக்கு கற்பிப்பதாகவும், மக்களை பாதுகாக்க புதிய இந்தியா தயங்காது என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

    கர்நாடகா மாநிலம் உடுப்பி நகரில் உள்ள பிரசித்தி பெற்ற கிருஷ்ணர் கோயிலில் பிரதமர் மோடி இன்று (நவ. 28) வழிபாடு நடத்தினார். இதற்காக டெல்லியில் இருந்து விமானம் மூலம் கர்நாடகா வந்த பிரதமர் மோடி, உடுப்பி நகரில் சாலை வலம் சென்று மக்களை சந்தித்தார். அப்போது சாலையின் இருபுறமும் திரண்டிருந்த மக்கள் பிரதமர் மோடிக்கு மலர்களை தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    பின்னர், உடுப்பி நகரில் உள்ள கிருஷ்ணர் கோயிலுக்கு சென்ற பிரதமர் மோடிக்கு கோயில் நிர்வாகம் சார்பில் பூர்ண கும்ப மரியாதை வழங்கப்பட்டது. தொடர்ந்து மடத்தில் நடந்த லட்சகாண்ட கீதை பாராயண நிகழ்ச்சியில் பிரதமர் கலந்து கொண்டார். பின்னர், கோயில் வளாகத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள சுவர்ண தீர்த்த மண்டபத்தை திறந்து வைத்த பிரதமர் மோடி, ஸ்ரீபுட்டிகே மடத்தின் தலைவர் ஸ்ரீசுகுணேந்திரதீர்த்த சுவாமியை சந்தித்து ஆசி பெற்றார்.

    பின்னர் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, சில நாட்களுக்கு முன்பு கீதை பிறந்த குருசேத்திரத்தின் புனித பூமியில் இருந்ததாகவும், தற்போது பகவான் ஸ்ரீகிருஷ்ணர் மற்றும் ஜகத்குரு ஸ்ரீமத்வாச்சாரியார் ஆகியோரின் ஆசிர்வதிக்கப்பட்ட பூமியில் இருப்பது மிகுந்த திருப்தியை தருவதாகவும் தெரிவித்தார்.  அராஜகம் செய்பவர்களை அழிக்க வேண்டியதன் அவசியத்தை கீதை நமக்கு கற்பிப்பதாக பிரதமர் மோடி குறிப்பிட்டார்.

    ஏழைகளுக்கு உதவ வேண்டும் என்ற கீதையின் செய்தியே பல்வேறு திட்டங்களுக்கு அடிப்படையாகும் என்றார். பயங்கரவாத தாக்குதலின் போது முந்தைய அரசுகள் செயல்படாமல்  இருந்ததாக குற்றம்சாட்டிய பிரதமர் மோடி, புதிய இந்தியா தனது மக்களைப் பாதுகாக்க தயங்காது என்றும் யாருக்கும் தலைவணங்காது என்றும் தெரிவித்தார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleடிச.4-ல் இந்தியா வருகிறார் ரஷ்ய அதிபர் புதின்
    Next Article கோவா: பிரம்மாண்ட வெண்கல ராமர் சிலையை திறந்து வைத்தார் பிரதமர் மோடி!
    Editor TN Talks

    Related Posts

    இலவச கார் பயணம், அல்வா, ரூ.1க்கு அரிசி மாவு!. தேர்தல் ஆணையத்தின்  கவர்ச்சி அறிவிப்புகள்!.

    April 5, 2026

    ரூ.167 கோடிக்கு ஏலம் போன ஓவியம்!. புதிய உலக சாதனை!

    April 5, 2026

    அகமதாபாத் விமான விபத்து!. கருப்பு பெட்டி தரவுகளை வெளியிடுங்கள்!. பிரதமர் மோடிக்கு கடிதம்!

    April 5, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

     பாஜக-வின் அதிரடி பிரச்சாரம்!. நாளை ஒரே நாளில் 6 மத்திய அமைச்சர்கள் தமிழகம் வருகை!

    இலவச கார் பயணம், அல்வா, ரூ.1க்கு அரிசி மாவு!. தேர்தல் ஆணையத்தின்  கவர்ச்சி அறிவிப்புகள்!.

    மேலூர் தொகுதியில் விஸ்வநாதன் போட்டி!. காங்கிரஸ் அறிவிப்பு!

    ரூ.167 கோடிக்கு ஏலம் போன ஓவியம்!. புதிய உலக சாதனை!

    இந்தியத் திரையுலகை ஆளும் டாப் 6 ராணிகள்!. அசைக்க முடியாத முதலிடம்!. யார் தெரியுமா?

    Trending Posts

     பாஜக-வின் அதிரடி பிரச்சாரம்!. நாளை ஒரே நாளில் 6 மத்திய அமைச்சர்கள் தமிழகம் வருகை!

    April 5, 2026

    இந்தியத் திரையுலகை ஆளும் டாப் 6 ராணிகள்!. அசைக்க முடியாத முதலிடம்!. யார் தெரியுமா?

    April 5, 2026

    மேலூர் தொகுதியில் விஸ்வநாதன் போட்டி!. காங்கிரஸ் அறிவிப்பு!

    April 5, 2026

    ரூ.167 கோடிக்கு ஏலம் போன ஓவியம்!. புதிய உலக சாதனை!

    April 5, 2026

    “நாங்கள் அவரை மீட்டுவிட்டோம்”!. ஈரானால் வீழ்த்தப்பட்ட அமெரிக்க F-15 விமானத்தின் 2வது விமானி மீட்பு!. டிரம்ப் உறுதி!

    April 5, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.