மத்திய பட்ஜெட்டில் வருமான வரி விகிதம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில் எந்த வித மாற்றமும் செய்யப்படவில்லை.

மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்துவரும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், 1.4 லட்சம் கோடி ரூபாய் நிதி குழு GRANT ஆக அறிவிப்பு. மாநிலங்களுக்கு வரி பகிர்வு விகிதத்தில் எந்த மாற்றமும் இல்லை. புதிய வருமான வரிசட்டம் 2026 ஏப்ரல் முதல் அமல். விபத்து கால காப்பீடுகள் என்பது வருமான வரி விலக்கை பெறுகிறது. வருமானவரி தாக்கல் முறை மேலும் எளிமைப்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ளார்.

அதன்படி, ரூ.4 லட்சம் வரை: 0%,

ரூ.4 லட்சம் – ரூ.8 லட்சம் வரை 5%,

ரூ.8லட்சம் – ரூ.12 லட்சம் வரை -10%,

ரூ,12 லட்சம் – ரூ.16 லட்சம் வரை – 15%,

ரூ.16லட்சம் – ரூ. 20 லட்சம் வரை – 20%,

ரூ.20 லட்சம் – ரூ. 24 லட்சம் வரை -25%.

ரூ.24 லட்சத்திற்கு மேல் – 30% வரி விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வரி தாக்கல்செய்யப்படும்முறை எளிதாக்கப்படும் என்றும் ITR1, ITR2 தாக்கலுக்கான அவகாசமும் நீட்டிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

*வருமான வரி தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் டிசம்பர் இறுதி பதிலாக மார்ச் இறுதி வரை கால அவகாசம் நீடித்து வழங்கப்படும். வருமானம் குறித்த தவறான தகவல்களை தெரிவித்தால் 100% அபராதம் விதிக்கப்படும்.

*கால்நடை மற்றும் அதனுடன் தொடர்புடைய மருத்துவக் கல்லூரிகள், ஆய்வுக்கூடங்கள் அமைக்க கடன் சார்ந்த மூலதன மானியத் திட்டம் (Loan-linked Capital Subsidy Scheme) அறிமுகம் செய்யப்படும்.

*20 லட்சத்திற்கும் குறைவான மொத்த மதிப்புள்ள அசையாத வெளிநாட்டு சொத்துக்களை வெளியிடாதவர்களுக்கு வழக்குத் தொடரப்படுவதிலிருந்து அவர்களுக்கு விலக்கு அளிக்கப்படும்.

வரி குறைப்பு: மருத்துவம், கல்விக்கான மூலத்தொகையில் இருந்து வசூலிக்கப்படும் வரி (TCS) 5% இருந்து 2% மாக குறைக்கப்படுகிறது.

NRI’s அவர்களது சொத்துக்களை விற்கும் பொழுது அதற்கான வரி விகிதங்கள் குறைப்படுகிறது.

வெளிநாடு சுற்றுப்பயணம் செல்வோருக்கு வரிபிடித்தமானது தற்போது உள்ள 5% முதல் 20% ஆக உள்ளது . இது 2% ஆக குறைக்கப்படுகிறது.

விமான உதிரிபாகங்களுக்கான இறக்குமதியில் வரி குறைப்பு

காலணிகள் ஏற்றுமதி செய்வதற்கு மூலப்பொருட்களை வரியில்லாமல் இறக்குமதி செய்ய சலுகைகள் வழங்ப்படுகிறது.

வரி விலக்கு: மின்சார வாகனங்களை ஊக்குவிக்கும் வகையில் லித்தியம் பேட்டரி களுக்கான இறக்குமதி வரி இல்லை என அறிவிக்கப்படுகிறது.

புற்று நோய்க்கு தேவையான 17 மருந்து வகைகளுக்கு அடிப்படை சுங்க வரியில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது

7அரிய வகை நோய்களுக்கான மருந்துகளை இறக்குமதி செய்யும் போதும் அதற்கான வரி விலக்கு அளிக்கப்படுகிறது.

மைக்ரோ அவன்ளுக்கும் சுங்க வரி இல்லை என்று அறிவிக்கப்படுகிறது.

மத்திய பட்ஜெட் 2026: பாதுகாப்பு பிரிவுகளுக்கான விமான பாகங்களுக்கு சுங்க வரி தள்ளுபடி செய்யப்படும்.

*AIக்கு கூடுதல் கவனம் செலுத்தப்படும். AI மற்றும் குவாண்டம் தொழில்நுட்பத்தை நாட்டின் பல்வேறு துறைகளுக்கும் அறிமுகப்படுத்துவதற்கான ஒருங்கிணைந்த திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படுகின்றது.

இதேபோல், மாற்றுத்திறனாளிகளின் கவுரவமான வாழ்க்கைக்கு திட்டங்கள் அறிவிப்பு. மாற்றுத்திறனாளிகளின் உதவிக்கான உபகரணங்களில் உற்பத்தி அதிகரிக்கப்படும். வடகிழக்கு மாநிலங்களுக்கு சிறப்பு தொழில் தடம் அறிவிப்பு.

*மீன்வளத் துறையை மேம்படுத்துவதற்கான கடலோரப் பகுதிகளில் கட்டமைப்புகளை உருவாக்குவதற்கான திட்டங்கள் அறிவிப்பு.

* 3 கோடி மக்கள் தேங்காய் உற்பத்தி சார்ந்து இருக்கிறார்கள். உலகத்திலேயே இந்தியா தேங்காய் உற்பத்தியில் முதன்மையான நாடாக உள்ளது. இவர்களை மேம்படுத்துவதற்கான புதிய திட்டங்கள் அறிவிப்பு.

*மும்பை ஐ.ஐ.டி.யுடன் இணைந்து ABGC content creator lab 15,000 மேல்நிலை பள்ளிகளில், 500 கல்லூரிகளில் அமைக்கப்படும்.

*புதிய வடிமைப்பு துறைக்கான மையம் அமைக்கப்படும். இந்தியாவில் டிசைனர்களுக்கான பற்றாக்குறை நிலவுவதால் அதை சரி செய்வதற்காக இந்த மையம் அமைக்கப்படுகிறது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version