உத்தரகாண்டில் ஏற்பட்ட மேகவெடிப்பால் அங்கு வெள்ளம் ஏற்பட்டு ஒரு கிராமமே நீருக்குள் மூழ்கியது. இந்த சம்பவத்தை தொடர்ந்து 3-வது நாளாக அங்கு மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசி மாவட்டத்தில் உள்ள தாராலி பகுதியில் கடந்த 5-ம் தேதி திடீரென மேகவெடிப்பு ஏற்பட்டது. இதனால் கீர் கங்கா ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில், வீடுகள், கட்டடங்கள் நீரில் அடித்து செல்லப்பட்டன. அப்பகுதில் வசிக்கும் பொதுமக்கள் பலரும் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன. இந்த சம்பவத்தில் 5 பேர் உயிரிழந்ததாக கூறப்பட்டது.
சம்பவ இடத்தில் காவல்துறை, எஸ்.டி.ஆர்.எஃப், ராணுவம் மற்றும் தீயணைப்பு படைகளின் மீட்பு குழுக்கள் ஆகியோர் தேடுதல்