சத்தீஸ்கர் மாநிலத்தில் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் 7 நக்சலைட்டுகள் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்சலைட்டுகளுக்கு எதிரான தேடுதல் வேட்டையை கடந்த சில மாதங்களாக பாதுகாப்புப் படையினர் ஈடுபட்டுள்ளனர். இதுவரை 300-க்கும் மேற்பட்ட நக்சலைட்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், பிஜப்பூரின் தென்கிழக்கு பகுதி, தன்டேவாடாவில் பாதுகாப்புப் படையினர் இன்று காலையில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அங்கு பதுங்கியிருந்த நக்சலைட்டுகளுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் துப்பாக்கிச் சண்டை மூண்டது.
இந்த சண்டையில் 3 பாதுகாப்புப் படை வீரர்கள் வீரமரணமடைந்தனர். மேலும் 2 பேர் பலத்த காயமடைந்தனர். நக்சலைட்டுகள் தரப்பில் 7 பேர் பாதுகாப்புப் படையினரின் துப்பாக்கிச் சூட்டில் பலியாகினர்.
இதைத் தொடர்ந்து, அப்பகுதியில் வேறு நக்சலைட்டுகள் பதுங்கியுள்ளனரா என பாதுகாப்புப் படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.
