தற்போதைய கொள்கைகள் உற்பத்தித் துறையை ஊக்கமிழக்கச் செய்துவிட்டதாகவும், பொருளாதார அதிகாரத்தை ஒரு சில பெரிய கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு வழங்குவதாகவும் மத்திய அரசை ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.

நேற்று, காங்கிரஸ் கட்சி, ஜெர்மனியில் உள்ள ஒரு BMW தொழிற்சாலைக்கு தலைவர் ராகுல் காந்தி சென்றிருந்ததைக் காட்டும் காணொளியை பகிர்ந்தது. அந்தப் பயணத்தின் போது, உலகளாவிய போக்குவரத்து (mobility) மாற்றங்கள், இந்தியாவின் உற்பத்தித் திறன், மேலும் உற்பத்தி மற்றும் வேலைவாய்ப்புகளை மையமாகக் கொண்ட புதிய வளர்ச்சி மாதிரி தேவையெனும் விஷயங்கள் குறித்து அவர் பேசியிருந்தார்.

X தளத்தில் வெளியிடப்பட்ட அந்த காணொளியில், உள் எரிபொருள் இயந்திரங்களிலிருந்து (internal combustion engines) மின்சார போக்குவரத்துக்கு (electric mobility) மாற்றம் நடைபெற்று வருவதை அந்த கார் தயாரிப்பு  நிறுவனம் எவ்வாறு சமாளித்து வருகிறது என்பதை காந்தி குறிப்பிட்டார். இந்த மாற்றம் உலகம் முழுவதும் தொழில்துறைகளை மாற்றி அமைத்து வருவதாகவும் அவர் கூறினார்.

மின்சார வாகனத் துறையில் சீனா வேகமாக முன்னேறி வருவதை சுட்டிக்காட்டிய காந்தி, போக்குவரத்தில் ஏற்பட்ட இந்த மாற்றம் பீஜிங்கிற்கு குறிப்பிடத்தக்க போட்டித் திறனை வழங்கியுள்ளதாக கூறினார். மேலும், இன்னும் பெரிய அளவிலான கட்டமைப்புகளை உருவாக்கிக் கொண்டிருக்கும் இந்தியா போன்ற நாடுகளுக்கு, மாற்று வளர்ச்சி பாதையைத் தேர்வு செய்யும் ஒரு வாய்ப்பு இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

“மின்சார வாகனங்கள் துறையில் சீனா என்ன செய்திருக்கிறது என்பதைப் பாருங்கள். வேறு வகையான போக்குவரத்து முறையை பயன்படுத்தி, இப்போது அவர்கள் மிகப் பெரிய போட்டித் திறனை பெற்றுள்ளனர். ஆகவே, இன்னும் பெருமளவில் கட்டமைப்புகளை உருவாக்க வேண்டியதும், பெரிய அளவிலான திறன் கொண்டதுமான நம்மைப் போன்ற நாடுகள், உண்மையில் மிகவும் சுவாரஸ்யமான விஷயங்களைச் செய்ய முடியும்,” என்று அவர் கூறினார்.

பாஜக தலைமையிலான மத்திய அரசாங்கத்தை விமர்சித்த ராகுல் காந்தி, தற்போதைய கொள்கைகள் உற்பத்தித் துறையை ஊக்கமிழக்கச் செய்துவிட்டதாகவும், பொருளாதார அதிகாரத்தை ஒரு சில பெரிய கார்ப்பரேட் குழுக்களிடம் குவித்துள்ளதாகவும் குற்றம் சாட்டினார். இந்தியாவில் பெருமளவில் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கு உற்பத்தித் துறை மட்டுமே ஒரே வழி என்று அவர் வாதிட்டார்.
Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version