2025 ஆம் ஆண்டு ஒருவழியாக முடிந்து 2026 ஆம் ஆண்டை எதிர்நோக்கிக் காத்து இருக்கிறோம். கடந்த சில ஆண்டுகளில் உலக அளவில் மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய வகையில் சில நோய்த்தொற்றுக்கள் உருவாகி உலகையே உலுக்கி வந்திருக்கிறது. அப்படி 2025 ஆம் ஆண்டில் இந்தியாவில் அதிகம் பேரை பாதித்த 5 நோய்கள் என்னென்ன என்று இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
கொரோனா காலத்திற்கு பிறகு உலகளாவிய அளவில் ஆரோக்கியத்திற்கு எதிராக மிகவும் சவால்களை சந்தித்து வருகிறோம். கொடிய நோய்களின் பாதிப்பு தொடர்ச்சியாக மாறி மாறி வந்தவண்ணம் இருக்கின்றன. இந்தநிலையில், 2025ம் ஆண்டில் பருவ காலங்கள் மாற, மாற வெவ்வேறு விதமான பருவ கால காய்ச்சல்கள் வந்து கொண்டே இருந்தன. குழந்தைகளும் அடிக்கடி பாதிப்பை ஏதிர்கொண்டனர்.
கடந்த 2025 ஆம் ஆண்டு அம்மை நோய் பிரச்சினையாலும் கணிசமான இந்தியா முழுவதிலும் பாதிக்கப்பட்டார்கள். குறிப்பாக கடந்த ஆண்டு சின்னம்மையோடு சேர்த்து தட்டம்மையாலும் நிறைய பேர் பாதிக்கப்பட்டனர். வேகமாகப் பரவும் தன்மை கொண்ட இந்த பரவலுக்கு முன்கூட்டியே தடுப்பூசி போட வேண்டியது முக்கியம். தடுப்பூசி போடாத இடைவெளி அதிகமாக உள்ள இடங்களில் இதன் பரவலும் அதிகமாக இருந்தது.
கடந்த 2025 ஆம் ஆண்டில் நாட்டில் வழக்கத்தைக் காட்டிலும் கண் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் அதிகமாகவே ஏற்பட்டன. குறிப்பாக கண் சவ்வுகளில் ஏற்படும் அழற்சி, கன்சுவேட்டிவ்ஸ் என்று அழைக்கப்படும் மெட்ராஸ் ஐ, கண்களில் பூஞ்சை தாக்குதல் பிரச்சினைகள், கண்களில் திடீர் ரத்தக் கசிவு உள்ளிட்ட சில ஆபத்தான கண் நோய்கள் தாக்கின.
இதேபோல், தோலில் பூஞ்சை பாதிப்புகள், அழற்சி நோய்கள், சரும வறட்சி, நீர்ச்சத்து குறைபாட்டால் ஏற்படும் சருமப் பிரச்சினைகள் ஆகியவற்றால் அதிகமாகப் பாதிக்கப்பட்டனர்.
பொதுவாக உடல்நலப் பிரச்சினைகள் என்றாலே ஆன்டி பயாடிக் மாத்திரைகளை மருத்துவர்கள் பரிந்துரைப்பார்கள். ஒருகாலகட்டத்தில் மக்களே அதை மெடிக்கல் ஷாப்களில் தாங்களாகவே ஆன்டி பயாடிக் எதிர்ப்பு மருந்துகளை வாங்கி பயன்படுத்திக் கொள்கிறார்கள். இதனால் ஏராளமான பிரச்சினைகளைச் சந்தித்த ஆண்டாக இந்த 2025 ஐ சொல்லலாம்
