சுவிட்சர்லாந்து ஜெனிவா நகரத்தில் உள்ள நியூமிஸ்மாடிகா ஏல நிறுவனம் நடத்திய ஏலத்தில் 339 கிராம் எடை கொண்ட ஒரு தங்க நாணயம் கிட்டத்தட்ட நம் இந்திய மதிப்பில் 30 கோடி ரூபாய்க்கு ஏலம் போய் உள்ளது. ஸ்பெயின் நாட்டு மன்னர் மூன்றாம் பிலிப் ஆட்சிக்காலத்தில், 1609 ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்ட அந்த தங்க நாணயம் இவ்வளவு பெரிய தொகைக்கு ஏலம் போய் உள்ளது மக்கள் அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.
339 கிராம் எடை கொண்ட அந்த தங்க நாணயம் பல ஆண்டுகளுக்கு முன்பு தொலைந்து போனதாகவும் பின்னர் 1950 ஆம் ஆண்டு காலத்தில் அமெரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டது என்றும் போடப்படுகிறது.
இந்த தங்க நாணயம் ஏலம் போவதற்கு முன்பு ரோமானிய பேரரசர் ஃபெர்டினாண்ட் iii சொந்தமான 100 டெகெட் நாணயம் ( Ducat Coin ) 22 கோடி ரூபாய்க்கு ஏலம் போனதே அதிகபட்ச சாதனையாக இருந்தது.
தற்பொழுது இந்த 339 கிராம் எடை கொண்ட தங்க நாணயம் அதிகபட்சமாக 30 கோடி ரூபாய்க்கு ஏலம் போனதை தொடர்ந்து, ஐரோப்பாவில் ஒரு நாணயம் இவ்வளவு பெரிய தொகைக்கு ஏலம் போனது இதுவே முதல் தடவை என்றும் கூறப்படுகிறது.
