பெர்லின் மிருகக்காட்சிசாலையின் செல்லப் பிள்ளையான ‘பாதூ’ (Fatou) என்ற பெண் கொரில்லா, தனது 69-வது பிறந்தநாளைக் கொண்டாடி உலகையே வியப்பில் ஆழ்த்தியுள்ளது. பொதுவாகக் காடுகளில் வாழும் கொரில்லாக்கள் 35 வயது வரை மட்டுமே உயிர்வாழும் நிலையில், மனிதர்களின் பராமரிப்பில் இருக்கும் பாதூ, அந்த எல்லையைத் தாண்டி இரு மடங்கு ஆயுளுடன் கின்னஸ் சாதனை படைத்துள்ளது. 1959-ஆம் ஆண்டு இந்தப் பூங்காவிற்கு அழைத்து வரப்பட்ட இந்த கொரில்லா’, தற்போது உலகின் மிக வயதான கொரில்லாவாகக் கெத்து காட்டி வருகிறது.

இந்த விசேஷ நாளை முன்னிட்டு, பூங்கா நிர்வாகம் பாதூவிற்குப் பிடித்தமான பழங்கள் மற்றும் காய்கறிகளால் ஆன பிரத்யேக விருந்தை வழங்கிக் கௌரவித்தது. 1974-ல் பெர்லினின் முதல் கொரில்லா குட்டியை ஈன்றெடுத்த பெருமைக்குரிய இந்தப் பாட்டி, தற்போது தனது பேத்தி கொரில்லாவுடன் நேரத்தைச் செலவிட்டு வருகிறது. காடுகளில் கொரில்லாக்களின் எண்ணிக்கை குறைந்து வரும் சூழலில், முறையான பராமரிப்பும் பாதுகாப்பும் இருந்தால் விலங்குகளின் வாழ்நாளை நீட்டிக்க முடியும் என்பதற்குப் பாதூ ஒரு வாழும் உதாரணமாகத் திகழ்கிறது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version