சமீபத்தில் ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்தும் என்றும் அமெரிக்கா மற்றும் வெனிசுலாவிடம் இருந்து அதிக எண்ணெய் வாங்க பிரதமர் மோடி ஒப்புக்கொண்டதாக டிரம்ப் அறிவித்திருந்தார். இதன்காரணமாக இந்தியா மீதான வரி குறைக்கப்பட்டது.
இருப்பினும், ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் கொள்முதலை நிறுத்துவதற்கான எந்த அறிக்கையையும் இந்தியாவிடம் இருந்து தற்போதுவரை பெறவில்லை என தலைமை செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் தெரிவித்திருந்தார்.
இந்தநிலையில், இந்நிலையில், இந்தியா எங்கு வேண்டுமானாலும் எண்ணெய் வாங்கட்டும் என்று ரஷியா தெரிவித்துள்ளது. இது தொடர்பாக ரஷிய அதிபர் மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில், “எந்த நாட்டிடன் இருந்தும் விருப்பத்திற்கேற்ப கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு முழு சுதந்திரம் உள்ளது. முந்தைய காலங்களிலும் பிற நாடுகளிடம் இருந்து இந்தியா எண்ணெய் வாங்கியுள்ளது. இதில் புதிதாக எதுவும் இல்லை. ரஷ்யா ஒன்றும் கச்சா எண்ணெய் விற்பனை செய்யும் ஒரே நாடு கிடையாது என்பது எங்களுக்குத் தெரியும் என்று தெரிவித்துள்ளது.
