அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் தீவிர ஆதரவாளரும், வலதுசாரியுமான சார்லி கிரக் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். அவருக்கு வயது 34.
TURNING POINT USA என்ற இளைஞர் அமைப்பை தனது 18 வயதில் நிறுவிய சார்லி கிர்க், டிரம்ப்பை ஆதரித்து பலகட்ட பிரசாரங்களை செய்தவர். டிரம்ப்பின் மகன் ஜூனியர் டிரம்புடன் இணைந்து வரலாற்றில் டிரம்ப்பை இடம்பெற செய்ய வேண்டும் என்பதற்காக பல வேலைகளில் ஈடுபட்டவர். டிவி விவாதங்களில் டிரம்புக்காக உரக்க பேசியர். வலதுசாரி கருத்துகளை பின்பற்றும் சார்லி கிர்க் மீது பெரும்பான்மையான மக்களுக்கு வெறுப்பு மட்டுமே இருந்து வந்தது.
அமெரிக்காவில் ஒவ்வொரு மனிதனும் துப்பாக்கி வைத்துக் கொள்ள வேண்டும் என கூறியவர் சார்லி. ஏற்கனவே அமெரிக்காவில் துப்பாக்கி கலாச்சாரம் தலைவிரித்தாடும் நிலையில், இவரது இந்த கருத்து மக்களிடம் சலசலப்பை ஏற்படுத்தியது. பள்ளிகளில் பாதுகாப்பை அதிகரித்துக் கொள்ளலாமே தவிர, யாரையும் துப்பாக்கி எடுத்து வரக் கூடாது என கூறக் கூடாது என கடந்த சில தினங்களுக்கு முன்பு கூறியிருந்தார் சார்லி கிர்க்.
இந்த நிலையில் அமெரிக்காவின் UTAH VALLEY பல்கலைகழகத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட சார்லி கிர்க், மர்ம நபர்களால் சுட்டுக் கொள்ளப்பட்டார். இந்த நாள் அமெரிக்காவின் கருப்பு நாள் என டிரம்ப் தெரிவித்துள்ளார். இந்த செயலில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். படுக்கொலை செய்யப்பட்ட சார்லிக்கு ஒரு மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.