வியட்நாம் எல்​லை​யில் ரோந்து பணிக்கு மனித ரோபோக்​களை ஈடு​படுத்த சீனா முடிவு செய்துள்ளது. சீனா​வின் சென்​ஜென் மாகாணத்​தில் உள்​ளது யுபிடெக் ரோபோட்​டிக்ஸ் நிறு​வனம்.

இது தொழில்​சாலைகள் மற்​றும் பொது சேவை​களுக்கு மனித ரேபோக்​களை உரு​வாக்கி தரு​கிறது. இந்​நிலை​யில் இந்​நிறு​வனத்​திடம் எல்​லை​யில் ரோந்து பணியை மேற்​கொள்​ளும் வகை​யில் ‘வாக்​கர் எஸ்2’ என்ற மனித ரோபோக்​களை தயாரித்து கொடுக்க 37 மில்​லியன் டாலருக்கு சீன அரசு ஒப்​பந்​தம் செய்​தது.

இதையடுத்து செயற்கை நுண்​ணறிவு கட்​டுப்​பாட்​டில் இயங்​கும் வகையி​லான ரோபோக்​களை யுபிடெக் இன்​ஜினீயர்​கள் உரு​வாக்​கினர். இந்த ரோபோக்​களை வியட்நாம் எல்லை அருகே குவாங்சி பகு​தி​யில் உள்ள ஃபேங்​செங்​காங் என்ற கடலோர பகு​தி​யில் ரோந்து பணி​யில் சீனா ஈடு​படுத்​தவுள்​ளது.

இந்த மனித ரோபோக்​கள் பயணி​களை வரிசை​யாக நிற்​கவைக்​க​வும், எளிமை​யான கேள்வி​களுக்கு பதில் அளிக்​கும் வகை​யிலும், வாக​னங்​களை ஒழுங்​குபடுத்​த​வும், எல்லை பணி​யாளர்​களுக்கு உதவி​யாகவும் செயல்​படும்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version