MK Stalin: அரசு முறை பயணமாக ஜெர்மனி சென்றுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்குள்ள விண்டேஜ் கார் அருங்காட்சியகத்தை பார்வையிட்டார்.
அந்நிய முதலீடுகளை ஈர்ப்பதற்காக ஜெர்மனி சென்றுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று உரையாற்றும்போது, தமிழ்நாட்டில் முதலீடு செய்யுமாறு அங்குள்ள தொழிலபதிபர்களுக்கு அழைப்புவ் விடுத்தார். அதன்படி ஜெர்மனி பயணத்தில் தமிழ்நாட்டிற்கு ரூ.3,201 கோடி முதலீடுகள் ஈர்த்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
முதலீடுகள் தொடர்பான உரையை முடித்து கொண்ட முதலமைச்சர் ஸ்டாலின் ஜெர்மனியின் டசல்டார்ஃப் நகரத்தில் உள்ள விண்டேஜ் கார் அருங்காட்சியகத்தை பார்வையிட்டுள்ளார். அருங்காட்சியகத்தை முதலமைச்சர் பார்வையிட்ட புகைப்படங்கள் வைரலான நிலையில் அவர் எக்ஸ் பதிவை வெளியிட்டுள்ளார்.
அதில், சென்னையில் இருந்து ஜெர்மனிக்கு வந்துள்ள பயணத்தில் உலகின் முதல் காரையும், புகழ்பெற்ற பந்தய காரையும் அருகில் பார்த்து மகிழ்ந்தேன். காலத்தால் அழியாத பொக்கிஷங்கள் உயிர்ப்புடன் இருப்பதை உணர்ந்தேன்” என குறிப்பிட்டுள்ளார்.