பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘நீயா நானா’ நிகழ்ச்சியின் சர்ச்சை குறித்து நடிகை அம்மு வீடியோ வெளியிட்டுள்ளார்.

நீயா நானா நிகழ்ச்சியை தெரு நாய்களை ஆதரிப்பவர்கள் மற்றும் எதிர்ப்பவர்கள் குறித்து நடந்த விவாதம், தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது. இதற்கு கடுமையான எதிர்ப்புகள் கிளம்பிய  நிலையில் நடிகை அம்மூ ராமச்சந்திரன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், நீயா நானா நிகழ்ச்சியில் கலந்து கொண்டதை வைத்து பலர் ட்ரோல் பண்ணிக்கிட்டு இருக்கீங்க. நிறைய தவறான வார்த்தைகளை நீங்க யூஸ் பண்ணுறீங்க. அதுக்கு எல்லாம் வருத்தப்பட்டு நான் இந்த வீடியோ போடல. நீயா நானாவில் என்ன நடந்துச்சு என்பதை எல்லாருக்கும் தெரியப்படுத்தனும் என்பதற்காக தான் இந்த வீடியோ. நீயா நானா என்பது ஒரு ஷோ. ரெக்கார்டு பண்ணின ஒரு விஷயத்தை வெறும் 45 நிமிஷம் எடிட் பண்ணி போட்டு இருக்காங்க.

நீயா நானா நிகழ்ச்சியின் எடிட் பண்ணாத வெர்ஷன் பார்த்தீங்கன்னா என்ன நடந்துச்சு என்ற கதை உங்களுக்கு தெரியும். ஒரு பக்கம் நாயை விரும்புறவங்க தெரு நாயை ஆதரிக்கிறோம் என்று இருந்தோம். இன்னொரு பக்கம் வேண்டாம்னு சொல்லுறவங்க இருந்தாங்க. ஆப்போசிட் சைடுல இருந்தவர்களுக்கு கொடுக்கப்பட்ட வாய்ப்பு தான் அதிகம். எங்கெல்லாம் நாய்களால் பிரச்சனை நடந்துச்சோ அவர்களை எல்லாம் தேடி தேர்வு செஞ்சு கூட்டிட்டு வந்து அவங்க கிட்ட கேள்வி கேட்ட கோபி அவர்கள், இந்த சைடுல எதுக்காக நாய்கள் வேண்டும் என்று சொன்ன விஷயத்தை கேட்கவே இல்லை. நாங்க பேசனது எல்லாம் கட் பண்ணி எடிட் பண்ணி மாத்தி மாத்தி வச்சி இருக்காங்க.

மக்களே நமக்கு நாய்களும் வேணும் அதே மாதிரி அந்த நாய்களிடம் கடிவாங்காமல் எப்படி தோழமையோடு இருக்க வேண்டும் என்பதற்கு ஒரு சொல்யூஷன் கிடைக்கும் என்று தான் நாங்கள் இந்த நிகழ்ச்சிக்கு போனோம். மத்தபடி உங்களுடையவெறுப்பை சம்பாதிக்கணும் என்பது எங்களுடைய நோக்கம் கிடையாது. நானும் ஒரு மனுஷி தான். எங்களுக்கும் குடும்பம் இருக்கு இன்னைக்கு நான் எந்த இடத்தில் இருக்கேன் என்றால் முக்கியமான காரணம் நீங்கதான். அப்படி இருக்கும் போது எதுக்காக உங்களை கஷ்டப்படுத்த நான் யோசிக்க போறேன். இதை கொஞ்சமாவது யோசிச்சு பாருங்க என்று அந்த அம்மு ஆதங்கத்தோடு பேசியுள்ளார்.

Share.
Leave A Reply

Exit mobile version