ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் பெரியார் உருவப்படத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
தமிழ்நாட்டில் முதலீடுகளை ஈர்ப்பதற்கான வெளிநாடுகளுக்கு சென்ற முதலமைச்சர் ஸ்டாலின் ஜெர்மன் பயணத்தை முடித்து கொண்டு, இங்கிலாந்து சென்றுள்ளார். அங்கு லண்டன் சென்றுள்ள அவரது முன்னிலையில் முக்கிய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. இதனிடையே லண்டனில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்தில் பெரியாரின் உருவப்படத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைப்பதாக அறிவிக்கப்பட்டது.
அதன்படி இன்று காலை வரலாற்று சிறப்புமிக்க சம்பவமான பெரியார் உருவப்படத்தை ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் திறந்து வைத்தார். அதை தொடர்ந்து “The Dravidian Pathway” and “The Cambridge Companion to Periyar” என்ற நூலையும் வெளியிட்டார்.
தொடர்ந்து இந்நிகழ்வில் பேசிய அவர், பெரியாரின் மரபு மற்றும் திராவிட சிந்தனைகளின் ஆழமான தாக்கம் குறித்து எடுத்துரைத்து சிறப்புரையாற்றினார். பெரியார் உருவப்படம் திறப்பு தொடர்பாக முதலமைச்சர் நெகிழ்ச்சி வீடியோ ஒன்றையும் வெளியிட்டார். அதில், ” பெரியார் தமிழர் தலைவர் மட்டுமல்ல, தமிழ்நாட்டு தலைவர் மட்டுமல்ல, உலகெங்கும் உள்ள தன்மானத்தை தக்க வைத்த தலைவராக, சுயமரியாதையை காத்த தலைவராக விளங்கி இருந்தவர். அவருடைய உருவப்படத்தை திறந்து வைப்பதை நினைத்து பெருமைப்படுகிறேன் என பேசி இருந்தார்.