சஸ்காட்செவனில் உள்ள எஸ்டெர்ஹாசியில் (கனடா) டான்சோக் குடும்பத்தினரால் “பியூட்டி” என்று பொருத்தமாகப் பெயரிடப்பட்ட ஒரு அழகான வெளிர்-பழுப்பு நிற மான், தனது 27 ஆண்டுகளை தனது தந்தை மற்றும் நண்பரான லாய்டுடன் ( அந்த மானை எடுத்து தன் வீட்டில் வளர்த்த டான்சோக் குடும்பத்தைச் சேர்ந்தவர் ) மற்றும் அவரது குடும்பத்துடன் கழித்து துரதிஷ்டவசமாக கடந்த நவம்பர் 7ஆம் தேதி இறந்துவிட்டது.

சரியாக 1998 ஆம் ஆண்டு பிறந்த குட்டியான இந்த பெண் மான் லாய்டு வீட்டிற்கு வந்ததாக லாய்டு கூறியுள்ளார். பிறந்த குட்டி மானுக்கு எதுவும் ஆகி விடக்கூடாது என்று நாங்கள் அதை எடுத்து, அதற்கு பியூட்டி என்ற பெயரிட்டு வளர்க்கத் தொடங்கினோம். சரியாக 27 ஆண்டுகள் எங்களுடன் வாழ்ந்து, கடந்த நவம்பர் 7 அன்று இறந்தது இறந்துவிட்டது என்று கூறியுள்ளார். இதன் மூலம் மிக அதிக ஆண்டுகள் வாழ்ந்த மான் என்கிற கின்னஸ் உலக சாதனைக்கு பியூட்டி சொந்தக்காரராகியுள்ளது.

மேலும் மான் பற்றி கூறிய லாய்டு, “முதலில் கொஞ்சம் நாளைக்கு அவளை எங்கள் வீட்டில் வைத்திருந்தோம். பின்னர், அவள் ஒரு சிறிய கட்டிடத்திற்கு மாற்றப்பட்டாள். அங்கு நாங்கள் அதைச் சுற்றி ஒரு வேலி கட்டினோம், அவள் விரும்பியபடி கட்டிடத்திலிருந்து வெளியே வந்து செல்ல அனுமதித்தோம். அந்த வேலி அவளுக்கு வளர பாதுகாப்பான மற்றும் பாதுகாப்பான பகுதியை வழங்கியது.

மான் குட்டி தன் புல்வெளியை விட பெரிதாக வளர்ந்தவுடன், நாங்கள் அவளை ஒரு பெரிய இடத்திற்கு மாற்றினோம். ஆனால் அந்த மாற்றத்தால் அவள் மிகவும் மன அழுத்தத்திற்கு ஆளானாள். எனவே நாங்கள் அனைவரும் ஒரு சிறிய கேம்பரை அவள் இருந்த இடத்திற்கு கொண்டு வந்து அதன் அருகில் இருக்கும் படி அங்கே அவ்வப்போது தங்கிக் கொள்வோம்.

அவளுக்குப் பிடித்தமான சிற்றுண்டிகள் ஆர்கானிக் ஆப்பிள்கள் மற்றும் ஏகோர்ன்கள் ( கருவாலிக் கொட்டைகள்) , மேலும் அவள் ஓட்ஸ், ஆளி விதை, கேரட், வெள்ளரிகள் மற்றும் பீட்ரூட் கூழ் ஆகியவற்றையும் விரும்பிச் சாப்பிடுவாள்.

பியூட்டி இவ்வளவு நீண்ட மற்றும் வளமான வாழ்க்கையை வாழ மிக முக்கிய காரணமாக நாங்கள் பார்க்கப்படுவது, தினமும் உண்ணும் ஆரோக்கியமான உணவுகள், என்னுடன் சேர்ந்து தினமும் நடை பயணங்கள், சிறந்த உள்ளூர் கால்நடை மருத்துவர்களின் கவனிப்பு, அதனுடைய நண்பர் ஜிஞ்சர் ( மானுக்கு நண்பராக இருந்த பூனைக்குட்டி ) மற்றும் நிறைய நிறைய அன்பு”, என்று தாங்கள் வளர்த்த மானை பற்றி லாய்டு நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

