அமெரிக்க எப்ஸ்டீன் கோப்புகளில் அவரது பெயர் இடம்பெற்றதை அடுத்து பிரிட்டனின் மன்னர் மூன்றாம் சார்லஸின் தம்பியும், முன்னாள் இளவரசருமான ஆண்ட்ரூ மவுண்ட்பேட்டன்  கைது செய்யப்பட்டுள்ளார்.

பிபிசி அறிக்கையின்படி, பிரிட்டிஷ் போலீசார் அவரது பதவியை துஷ்பிரயோகம் செய்ததாக சந்தேகத்தின் பேரில் அவரை கைது செய்தனர். அவர் தனது 66வது பிறந்தநாளைக் கொண்டாடும் போது கைது செய்யப்பட்டார். பிரிட்டன் முன்னாள் இளவரசர் ஆண்ட்ரூ, பிரிட்டனின் வர்த்தகத் தூதராகப் பணியாற்றியபோது, பாலியல் குற்றவாளி ஜெஃப்ரி எப்ஸ்டீனுக்கு ரகசிய அரசு ஆவணங்களைப் பகிர்ந்ததாகக் கூறப்படும் புகாரின் அடிப்படையில் இந்தக் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அவர் தற்போது வசித்து வரும் நார்ஃபோக்கில் உள்ள சாண்ட்ரிங்ஹாம் எஸ்டேட்டில் வைத்து ‘தேம்ஸ் வேலி’  காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். ஏற்கனவே எப்ஸ்டீன் உடனான தொடர்புகளால் சர்ச்சையில் சிக்கியிருந்த ஆண்ட்ரூவின் ‘இளவரசர்’ மற்றும் ‘டியூக் ஆஃப் யார்க்’ போன்ற அரசப் பட்டங்களை மன்னர் சார்லஸ் கடந்த 2025-ஆம் ஆண்டே பறித்துவிட்டார்.

இது தொடர்பாக தேம்ஸ் வேலி காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, “விசாரணையின் ஒரு பகுதியாக, பொது அலுவலகத்தில் தவறான நடத்தை புரிந்ததாக எழுந்த சந்தேகத்தின் பேரில், நார்போக் பகுதியைச் சேர்ந்த 60-களில் இருக்கும் ஒருவரை இன்று கைது செய்துள்ளோம். மேலும், பெர்க்ஷயர் மற்றும் நார்போக்கில் உள்ள முகவரிகளில் சோதனைகளை மேற்கொண்டு வருகிறோம். அந்த நபர் தற்போது போலீஸ் காவலில் உள்ளார். தேசிய வழிகாட்டுதல்களின்படி, கைது செய்யப்பட்ட நபரின் பெயரை நாங்கள் வெளியிட மாட்டோம். இந்த வழக்கு தற்போது விசாரணையில் இருப்பதால், நீதிமன்ற அவமதிப்பைத் தவிர்க்கும் வகையில் செய்திகளை வெளியிடும்போது கவனமாக இருக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version