ஈரான் மீதான அமெரிக்க தாக்குதலில் அணுசக்தி கட்டமைப்புகள் அழிக்கப்படவில்லை என சர்வதேச அணுசக்தி அமைப்பின் இயக்குநர் ரஃபேல் க்ரோசி கூறியுள்ளார்.
தனியார் தொலைக்காட்சிக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், அமெரிக்க வான்வழித் தாக்குதல்கள் ஈரானின் அணுசக்தி திட்டத்தை முற்றிலுமாக அழித்துவிட்டதாகக் கூறுவது சந்தேகத்தை ஏற்படுத்துவதாகவும் தெரிவித்துள்ளார்.
இன்னும் சில மாதங்களுக்குள் யுரேனியம் செறிவூட்டலை தொடங்குவதற்கான திறனை ஈரான் கொண்டுள்ளதாகவும் ரஃபேல் க்ரோசி தெரிவித்துள்ளார்.
அமெரிக்கத் தாக்குதல்களால் சேதம் ஏற்பட்டாலும், அது முழுமையான அழிவை எட்டவில்லை என்றும், ஈரானின் அணுசக்தி உள்கட்டமைப்பு மற்றும் தொழில்நுட்பத் தளம் அப்படியே உள்ளதாகவும் சர்வதேச அணுசக்தி அமைப்பின் இயக்குநர் கூறியுள்ளார்.
ஈரானின் அணுசக்தி உள்கட்டமைப்பை அமெரிக்கா முற்றிலுமாக அழித்ததாகக் கூறிய அமெரிக்க அதிபர் டோனால்ட் டிரம்பின் கருத்துக்கு முரணாக அணுசக்தி அமைப்பின் தலைவர் பேசியிருப்பது குறிப்பிடத்தக்கது.