இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையேயான மிகப்பெரிய அணு ஆயுதப் போரைத் தான் தடுத்து நிறுத்தியதாகக் கூறி மீண்டும் ஒரு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

கடந்த 2025-ஆம் ஆண்டு மே மாதம், இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே ‘ஆபரேஷன் சிந்துார்’  காரணமாகக் கடுமையான போர் பதற்றம் நிலவியது. காஷ்மீரின் பகல்காம் பகுதியில் நடந்த தீவிரவாதத் தாக்குதலுக்குப் பதிலடியாக இந்திய ராணுவம் பாகிஸ்தான் எல்லைக்குள் புகுந்து தாக்குதல் நடத்தியது. அப்போது இரு நாடுகளும் அணு ஆயுதங்களைப் பயன்படுத்தும் நிலைக்குச் சென்றதாகச் செய்திகள் வெளியாகின.

இதுவரை இந்தியா – பாகிஸ்தான் உள்ளிட்ட 8 போர்களை தடுத்து நிறுத்தியதாக டிரம்ப் கூறிவருகிறார். அந்தவகையில், தற்போது, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், தனது இரண்டாவது பதவிக்காலத்தின் முதல் ‘ஸ்டேட் ஆஃப் தி யூனியன்’ ( உரையில், “நான் மட்டும் தலையிடாமல் இருந்திருந்தால், இந்தப் போரில் சுமார் 3.5 கோடி  மக்கள் இறந்திருப்பார்கள் என்று பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் என்னிடம் கூறினார்” என ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

இரு நாடுகளும் அணு ஆயுதத் தாக்குதலுக்குத் தயாராக இருந்ததாகவும், தனது தனிப்பட்ட முயற்சியால்தான் ஒரு மிகப்பெரிய உலகப் பேரழிவு தவிர்க்கப்பட்டதாகவும் அவர் பெருமிதத்துடன் குறிப்பிட்டுள்ளார்.

போரை உடனடியாக நிறுத்தவில்லை என்றால், இரு நாடுகளின் மீதும் 200 சதவீத வரி  விதிப்பேன் என்று தான் மிரட்டியதாகவும், அந்தப் பொருளாதார அச்சமே இரு நாடுகளையும் பின்வாங்கச் செய்ததாகவும் ட்ரம்ப் கூறியுள்ளார்.

அதிபர் ட்ரம்ப்பின் இந்தக் கூற்றை இந்தியத் தரப்பு ஏற்கனவே பலமுறை மறுத்துள்ளது. “போர் நிறுத்தம் என்பது அண்டை நாடுகளுக்கு இடையேயான நேரடிப் பேச்சுவார்த்தையின் மூலம் எடுக்கப்பட்ட முடிவே தவிர, இதில் மூன்றாவது நாட்டின் தலையீடு இல்லை” என்று இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் தெளிவுபடுத்தியுள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version