இன்று முழு சந்திரகிரகணம் நிகழ இருப்பதால் பல்வேறு பகுதிகளில் நிலவு ரத்த சிகப்பாக காட்சியளிக்கும் என கூறப்படுகிறது.
இன்று இரவு நிகழ இருக்கும் சந்திர கிரகணத்தின் போது நிலவு ரத்த சிவப்பாக காட்சியளிக்கும் என்றும் கூறப்பட்டுளது. ஆசிரியாவிலேயே இந்தியா, சீன பகுதிகளில் மட்டுமே நிலவு ரத்த சிவப்பாக காட்சியளிக்கும் அரிய நிகழ்வு நடைபெறுவதாக கூறிய வானிலையாளர்கள், முழு சந்திர கிரகணத்தையும் கிழக்கு ஆப்பிரிக்கா, மேற்கு ஆஸ்திரேலியாவில் முழு சந்திர கிரகணத்தை காண முடியும் என கூறியுள்ளனர்.
இன்று இரவு 9.56 மணிக்கு தொடங்கும் சந்திர கிரகணம், முழு சந்திர கிரகணமாக மாறி நள்ளிரவு 1.26 மணிக்கு முடிகிறது. கிட்டத்தட்ட 85 நிமிடங்களுக்கு முழு சந்திர கிரகணம் நிலவும் என கூறப்படுகிறது. அதிகாலை 2.25 மணிக்கு பின்னர் புறநிழல் பகுதியில் இருந்து நிலா வெளியேறும். இதேபோன்ற மற்றொரு முழு சந்திர கிரணம் 2028ம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதி தான் நிகழும் என்றும் வானிலை அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
இன்று நிகழும் சந்திர கிரகணத்தை காண சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதேபோல் வீட்டில் இருந்து வெறும் கண்களால் சந்திர கிரகணத்தை காண முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது அறிவியல் நிகழ்வாக பார்க்கப்பட்டாலும், ஆன்மீகவாதிகள் அதிக முக்கியத்துவம் கொடுத்து கோயில்களில் வழிபாடுகள், பூஜைகளில் சில மாற்றங்களை செய்துள்ளனர்.
சூரியனுக்கும், சந்திரனுக்கும் இடையே பூமி வரும் நிகழ்வு சந்திர கிரகணம் என கூறப்படுகிறது. இந்த நிகழ்வின் போது பூமியின் நிழல் சந்திரன் மீது விழுவதால் சில நிமிடங்கள் சந்திரன் மறைக்கப்படும். இந்த வானியல் நிகழ்வு இன்று இரவு நிகழ இருப்பதாக வானிலை ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.