பாகிஸ்தான் ராணுவத்தில் புதிய படைப்பிரிவு ஏற்படுத்தப்பட்டு இருப்பதாக அந்நாட்டின் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார்.

கடந்த ஏப்ரல் மாதம் 22-ம் தேதி பாகிஸ்தான் பயங்கரவாதிகள் காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் சுற்றுலாப் பயணிகள் மீது அத்துமீறி துப்பாக்கிச் சூடு நடத்தியது. இந்த தாக்குதலில் சுமார் 26 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். நாடு மட்டுமின்றி உலகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது இந்த சம்பவம்.

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ’ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் இந்தியா தக்க பதிலடி கொடுத்தது. பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டு, 100-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். இந்தியாவின் பதிலடியை சமாளிக்க முடியாத பாகிஸ்தான், தாக்குதலை நிறுத்துமாறு இந்தியாவிடம் கெஞ்சியது. இதனையடுத்து தாக்குதல் நிறுத்தப்பட்டது.

இருப்பினும் தங்களது சேதங்களை மறைத்து, தாக்குதலில் நாங்கள் தான் வெற்றி அடைந்தோம் என பாகிஸ்தான் பெருமைபட்டுக் கொண்டது. இந்த நிலையில், பாகிஸ்தான் நாட்டின் சுதந்திர தினத்தையொட்டி, அந்நாட்டு பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“பாகிஸ்தான் ராணுவத்தை மேம்படுத்தும் நோக்கில், ராணுவ ராக்கெட் படை என்ற புதிய பிரிவு தொடங்கப்பட உள்ளது. போர்க்காலங்களில் ஏவுகணை, ராக்கெட் ஆகியவற்றின் ஆற்றலை ஆய்வு செய்யவும், கண்காணிக்கவும் இந்த படைப்பிரிவு செயல்படும். நாட்டின் ராணுவ எதிர்வினை திறனின் முன்னேற்றத்தில் இது ஒரு முக்கிய மைல்கல்லாக அமையும்” என்று தெரிவித்துள்ளார்.

Share.
Leave A Reply

Exit mobile version