உக்​ரைன் போர் நிறுத்​தம் தொடர்​பான அமெரிக்​கா​வின் அமைதி திட்​டம் குறித்து பேச்​சு​வார்த்தை நடை​பெறு​வ​தாக ரஷ்ய அதிபரின் தூதர் தெரி​வித்​துள்​ளார்.

ரஷ்​யா, உக்​ரைன் போர் சுமார் 4 ஆண்​டு​களாக நடை​பெற்று வரு​கிறது. இதை முடிவுக்​குக் கொண்​டுவர அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தொடர்ந்து முயற்சி செய்து வரு​கிறார். அவர் சமீபத்​தில் ஒர் அமைதி திட்​டத்தை முன்​மொழிந்​தார். இது தொடர்​பாக ஜெர்​மனி​யின் பெர்​லின் நகரில் உக்​ரைன், ஐரோப்​பிய யூனியன் அதி​காரி​கள் ஆலோ​சனை நடத்​தினர்.

இதுகுறித்து கிறில் டிமிட்​ரீவ் மியாமி நகரில் செய்​தி​யாளர்​களிடம் நேற்று முன்​தினம் கூறும்​போது, “பேச்​சு​வார்த்தை ஆக்​கப்​பூர்​வ​மாக நடை​பெற்று வரு​கிறது. இன்​றும் தொடரும், நாளை​யும் தொடரும்” என்​றார்.

முன்​ன​தாக, அமெரிக்கா மற்​றும் ஐரோப்​பிய அதி​காரி​களு​டன் தனது தலை​மையி​லான குழு தனித்​தனி​யாக ஆலோ​சனை நடத்​தி​ய​தாக உக்​ரைனின் தலை​மைப் பேச்​சு​வார்த்​தை​யாளர் கடந்த வெள்​ளிக்​கிழமை தெரி​வித்​திருந்​தார். இந்​நிலை​யில், ஜெலன்​ஸ்கி இவ்​வாறு தெரி​வித்​துள்​ளார்​.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version