Close Menu
    What's Hot

    கொடியில் கருப்பு சிவப்பு!. தேமுதிக-திமுக நல்லுறவு தமிழ்நாட்டின் உயர்வுக்குப் பங்களிக்கட்டும்!. முதல்வர் ஸ்டாலின்!

    அதிமுக மெகா கூட்டணி கனவில் பேரிடி!. திமுகவில் இணைந்தார் பிரேமலதா!. உறுதியானது கூட்டணி!

    சென்னையில் பின்னடவை சந்திக்கிறதா திமுக?. கலைஞர் தொகுதியில் களமிறங்க உதயநிதி திட்டம்!. 

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»உலகம்»இலங்கை வன்னி தொகுதி முன்னாள் எம்.பி. திலீபன் வழக்கு..
    உலகம்

    இலங்கை வன்னி தொகுதி முன்னாள் எம்.பி. திலீபன் வழக்கு..

    Editor TN TalksBy Editor TN TalksJune 6, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    Thileepan MP
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    இலங்கை வன்னி தொகுதியின் முன்னாள் எம்.பி திலீபன் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், ” 1990 ஆம் ஆண்டு இலங்கையில் அசாதாரண சூழல் ஏற்பட்டபோது இந்தியாவிற்கு அகதியாக வந்து விருதுநகர் அகதிகள் முகாமில் தங்கி இருந்தேன். பின்னர் 2019 ஆம் ஆண்டு இலங்கைக்கு சென்று, அங்கு வன்னி தொகுதியில் போட்டியிட்டு வன்னி தொகுதியின் எம்பி ஆக தேர்வு செய்யப்பட்டு 2024 ஆம் ஆண்டு வரை பதவி வகித்தேன்.

    இந்நிலையில் கடந்த பிப்ரவரி 10ஆம் தேதி இலங்கையிலிருந்து வெளிநாடு சென்றபோது கொச்சி விமான நிலையத்தில் இந்திய பாஸ்போர்ட்டை சட்டவிரோதமாக பயன்படுத்தியதாக கைது செய்து சென்னை புழல் சிறையில் அடைத்தனர். இந்த வழக்கிற்கும் எனக்கும் எவ்விதமான தொடர்பும் இல்லை. இந்த வழக்கில் ஜாமின் கோரி மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தேன். அதனை விசாரித்த நீதிமன்றம் திருச்சி சிறப்பு அகதிகளின் முகாமில் தங்கி இருக்க வேண்டும் என்ற நிபந்தனையை விதித்துள்ளது. வழக்கில் இறுதி குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு விட்ட நிலையில் அதில் என் மீது எந்த குற்றச்சாட்டும் முன்வைக்கப்படவில்லை. என் மீது வேறு வழக்குகளும் இல்லை. எனவே திருச்சி சிறப்பு முகாமில் இருக்க வேண்டும் என்ற நிபந்தனையை தளர்த்தி உத்தரவிட வேண்டும்” எனக் கூறியிருந்தார்.

    இந்த வழக்கை விசாரித்த நீதிபதி மஞ்சுளா, “இது தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் நீதிபதி முன்பாக இந்த வழக்கை பட்டியலிட உத்தரவிட்டு வழக்கை செவ்வாய்க்கிழமைக்கு ஒத்திவைத்தார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleராஜ்யசபா தேர்தல் – கமல்ஹாசன் வேட்புமனு தாக்கல்
    Next Article திருவண்ணாமலையில் சட்டவிரோதமாக கட்டப்பட்ட 1,535 கட்டிடங்கள்… அகற்ற எடுத்த நடவடிக்கை என்ன? கலெக்டருக்கு கேள்வி…
    Editor TN Talks

    Related Posts

    டிரம்பின் அழுத்தம்!. ரஷ்யாவிலிருந்து இந்தியாவின் இறக்குமதி 40% குறைந்தது!.

    February 18, 2026

    இம்ரான் கானுக்கு ஆதரவாக இந்திய ஜாம்பவான்கள்!. பாகிஸ்தான் அரசுக்கு கடிதம்!. 

    February 17, 2026

    வங்கதேசத்தின் 11வது பிரதமரானார் தாரிக் ரஹ்மான்!. 25 பேர் கொண்ட அமைச்சரவையில் இந்து முகம்!.

    February 17, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    கொடியில் கருப்பு சிவப்பு!. தேமுதிக-திமுக நல்லுறவு தமிழ்நாட்டின் உயர்வுக்குப் பங்களிக்கட்டும்!. முதல்வர் ஸ்டாலின்!

    அதிமுக மெகா கூட்டணி கனவில் பேரிடி!. திமுகவில் இணைந்தார் பிரேமலதா!. உறுதியானது கூட்டணி!

    சென்னையில் பின்னடவை சந்திக்கிறதா திமுக?. கலைஞர் தொகுதியில் களமிறங்க உதயநிதி திட்டம்!. 

    தங்கம், வெள்ளி விலை சரமாரி உயர்வு!. இன்றைய நிலவரம் இதோ!.

    இலங்கை கடற்படை தொடர் அட்டூழியம்!. தமிழக மீனவர்கள் 22 பேர் சிறைபிடிப்பு!.

    Trending Posts

    அதிமுக மெகா கூட்டணி கனவில் பேரிடி!. திமுகவில் இணைந்தார் பிரேமலதா!. உறுதியானது கூட்டணி!

    February 19, 2026

    சென்னையில் பின்னடவை சந்திக்கிறதா திமுக?. கலைஞர் தொகுதியில் களமிறங்க உதயநிதி திட்டம்!. 

    February 19, 2026

    கொடியில் கருப்பு சிவப்பு!. தேமுதிக-திமுக நல்லுறவு தமிழ்நாட்டின் உயர்வுக்குப் பங்களிக்கட்டும்!. முதல்வர் ஸ்டாலின்!

    February 19, 2026

    தங்கம், வெள்ளி விலை சரமாரி உயர்வு!. இன்றைய நிலவரம் இதோ!.

    February 19, 2026

    நாடு முழுவதும் புனித ரமலான் நோன்பு இன்று தொடங்கியது!

    February 19, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.