Close Menu
    What's Hot

    முதல்வர் விஜய்யைச் சுற்றிய அதிகார வட்டம்… வெடிக்கும் சர்ச்சைகள்

    “கூவத்தைப் பார்த்தபோது தெரியவில்லையா?” – ஆளுநருக்கு சு. வெங்கடேசன் பதிலடி

    பழிக்குப் பழி: நெல்லை அருகே தந்தை, 5 வயது மகன் வெட்டிக்கொலை – தலையை துண்டித்து கொடூரம்

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • உலகம்
    • சிறப்புக் கட்டுரைகள்
    • வர்த்தகம்
    • More
      • டெக்னாலஜி
      • LIFESTYLE
      • koilgal
    TN Talks
    Home»தமிழ்நாடு»திருவண்ணாமலையில் சட்டவிரோதமாக கட்டப்பட்ட 1,535 கட்டிடங்கள்… அகற்ற எடுத்த நடவடிக்கை என்ன? கலெக்டருக்கு கேள்வி…
    தமிழ்நாடு

    திருவண்ணாமலையில் சட்டவிரோதமாக கட்டப்பட்ட 1,535 கட்டிடங்கள்… அகற்ற எடுத்த நடவடிக்கை என்ன? கலெக்டருக்கு கேள்வி…

    Editor TN TalksBy Editor TN TalksJune 6, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    images 3 1
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    திருவண்ணாமலை மலையில் சட்டவிரோதமாக கட்டப்பட்டுள்ள 1,535 கட்டிடங்களை அகற்ற எடுத்த நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய மாவட்ட ஆட்சியருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில் அமைந்துள்ள மலையில் சட்டவிரோதமாக கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை அகற்றக் கோரி, வழக்கறிஞர் யானை ராஜேந்திரன், சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கை தாக்கல் செய்துள்ளார்.

    இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், சட்டவிரோத கட்டுமானங்களை கண்டறிந்து அகற்ற, ஓய்வுபெற்ற நீதிபதி கோவிந்தராஜன் தலைமையில், வனத்துறை, வருவாய் துறை அதிகாரிகள் அடங்கிய குழுவை அமைத்து, உத்தரவிட்டிருந்தது.

    இந்த வழக்கு தலைமை நீதிபதி ஶ்ரீராம் மற்றும் நீதிபதி சுந்தர் மோகன் அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்த போது, எந்த அனுமதியும் பெறாமல் 1,535 கட்டுமானங்கள் கட்டப்பட்டு உள்ளதாகவும், அவற்றை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் குழு தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

    இந்த அறிக்கையை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், திருவண்ணாமலை கிரிவல பாதையில் உள்ள 1,535 சட்டவிரோத கட்டுமானங்களை அகற்ற எடுத்த நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டு, விசாரணையை ஜூன் 20 ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

    இதேபோல, திருவண்ணாமலையில் உள்ள
    நீர் நிலைகள் ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் தாக்கல் செய்திருந்த வழக்கும், தலைமை நீதிபதி ஶ்ரீராம் மற்றும் நீதிபதி சுந்தர் மோகன் அமர்வில் விசாரணைக்கு வந்தது.

    நில நிர்வாக ஆணையர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டிருந்த அறிக்கையில், நீர் நிலைகள் என மனுதாரர் குறிப்பிட்டுள்ள 170 இடங்களில் 84 மட்டுமே நீர் நிலைகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளதாக் கூறப்பட்டிருந்தது.

    இதையடுத்து, வகைப்படுத்தப்பட்டுள்ள 84 நீர் நிலைகளில் ஆக்கிரமிப்புகள் உள்ளதா? என கண்டறியவும், ஆக்கிரமிப்புகள் இருந்தால் அவற்றை அகற்ற எடுத்த நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை ஜூலை மாதத்துக்கு தள்ளிவைத்தனர்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleஇலங்கை வன்னி தொகுதி முன்னாள் எம்.பி. திலீபன் வழக்கு..
    Next Article குடிநீர் வாரியத்தில் நவீன மாஸ்டர் ரோல் ஊழல்: ஆண்டு ரூ.90 கோடி சுருட்டப்படுவதாக புகார்!
    Editor TN Talks

    Related Posts

    முதல்வர் விஜய்யைச் சுற்றிய அதிகார வட்டம்… வெடிக்கும் சர்ச்சைகள்

    July 2, 2026

    “கூவத்தைப் பார்த்தபோது தெரியவில்லையா?” – ஆளுநருக்கு சு. வெங்கடேசன் பதிலடி

    July 2, 2026

    பழிக்குப் பழி: நெல்லை அருகே தந்தை, 5 வயது மகன் வெட்டிக்கொலை – தலையை துண்டித்து கொடூரம்

    July 2, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    முதல்வர் விஜய்யைச் சுற்றிய அதிகார வட்டம்… வெடிக்கும் சர்ச்சைகள்

    “கூவத்தைப் பார்த்தபோது தெரியவில்லையா?” – ஆளுநருக்கு சு. வெங்கடேசன் பதிலடி

    பழிக்குப் பழி: நெல்லை அருகே தந்தை, 5 வயது மகன் வெட்டிக்கொலை – தலையை துண்டித்து கொடூரம்

    ஜெயிலர் 2 படத்தின் அசத்தல் அப்டேட்..! படக்குழுவின் அறிவிப்பால் ரசிகர்கள் உற்சாகம்..!

    நிலநடுக்கங்களால் வெனிசுலாவில் கடும் பாதிப்பு..! ரூ.95,000கோடி இழப்பு என தகவல்..!

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.