கிட்டத்தட்ட 40 ஆண்டுகளுக்கும் மேலாக மேற்கு ஆசிய நாடுகளான ஈரானும், இஸ்ரேலும் மோதலில் ஈடுபட்டு வருகின்றன. கடந்த 2024-ம் ஆண்டு இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்த, பதிலுக்கு காசா மீது இஸ்ரேல் தொடுத்த தாக்குதல், பிறகு போராக மாறி, இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வருகிறது. இஸ்ரேலின் தாக்குதலில் ஹமாஸ் மற்றும் லெபனானின் ஹிஸ்புல்லாக்கள் பெரும் சேதத்தை சந்தித்ததால், ஆத்திரமடைந்த ஈரான், ஹமாசுக்கு ஆதரவாக இஸ்ரேல் மீது தாக்குதலை நடத்தியது.

இந்த இரு நாடுகளுக்கும் ஆதராவகவும், எதிராகவும் பல நாடுகள் தங்கள் முன்னெடுப்புகளை எடுக்க, அமெரிக்கா ஈரான் மீது பொருளாதார தடைகளை விதித்தது. அத்தோடு அமெரிக்காவுடன் அணுசக்தி ஒப்பந்தம் போட பேச்சுவார்த்தை நடத்தி வரும் நிலையில், 6-வது சுற்று பேச்சுவார்த்தை நாளை (15.06.2025) ஓமனில் நடைபெறவுள்ளது. இதற்கிடையே அணுஆயுத பலம் பொருந்திய ஈரானின் அணு ஆயுதபடுகொலைக்கு ஒருபோதும் ஆளாகக் கூடாது என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் முடிவெடுத்துள்ளார்.

மேலும் ஈரான் – அமெரிக்கா இடையிலான அணு ஆயுத ஒப்பந்தத்திற்கு எதிராக நெதன்யாகு பல்வேறு கருத்துகளை முன்வைத்து வருகிறார். ஒருவேளை இருநாடுகளுக்கும் இடையே அணுஆயுத ஒப்பந்தம் நிறைவேறினால், ஈரான் மீது அமெரிக்கா விதித்த பொருளாதார தடையை அமெரிக்கா விலக்கி விடும் எனவும், அவ்வாறு விலக்கினால், ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்துவதில் தடை ஏற்பட்டு விடுமென கருதுவதாக கூறியிருக்கிறார்.

ஈரானின் அணுசக்தி திட்டத்திற்கான 3-வது செறிவூட்டும் மையம் ஒன்றை ஈரான் நிறுவ இருப்பதாக வெளியான தகவலை தொடர்ந்து இஸ்ரேல் நேற்று (13.06.2025) ஈரான் மீது தாக்குதல் நடத்த தொடங்கியது. அணுசக்தி மையங்கள் மற்றும் கண்டம் விட்டு கண்டம் தாக்கும் ஏவுகணை அமைப்புகள் அடங்கிய ராணுவ தளங்கள்,
வான் பாதுகாப்பு அமைப்புகளை குறிவைத்து இந்த தாக்குதலை நடத்தியது. இஸ்ரேலின் 200-க்கு மேற்பட்ட போர் விமானங்கள், ஈரானில் 100 இலக்குகளை குறிவைத்து துல்லியமாக தாக்கின. ஈரான் தலைநகர் டெஹ்ரான் உள்பட பல பகுதிகளில் தாக்குதல் நடத்தப்பட்டது.

இஸ்ரேலின் இந்த தாக்குதலில் ஈரானின் ராணுவ உயரதிகாரிகள் உட்பட பலர் உயிரிழந்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு பதிலடியாக, இஸ்ரேலின் டெல் அவிவ் நகரம் உட்பட பல முக்கிய நகரங்களில் ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதல்களுக்கு மத்தியிலும் ஈரான் அணுஆயுத பேச்சுவார்த்தையை தொடர வேண்டும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார். இதற்கிடையே ஈரான் மீதான இஸ்ரேலின் தாக்குதலுக்கு ரஷியா கண்டனம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Share.
Leave A Reply

Exit mobile version