உலகில் குடியுரிமை (Citizenship) பெற மிகவும் கடினமான நாடுகள் பல உள்ளன. சட்டப் பாதுகாப்பு, கலாச்சாரக் கட்டுப்பாடுகள், மத அடையாளம், மக்கள் தொகை சமநிலை, பாதுகாப்பு காரணங்கள் போன்றவற்றால் குடியுரிமையை மிகவும் அரிதாக ஒரு சில நாடுகளில் வழங்கப்படுகின்றன.
அப்படி உலகில் உள்ள நாடுகளில் குடியுரிமை பெற மிகவும் கடினமான நாடுகளாக பார்க்கப்படும் நாடுகளை பற்றிய தொகுப்பினை பார்ப்போம்.
உலகில் குடியுரிமை பெற மிகவும் கடினமான நாடுகள் :
1.குவைத் (Kuwait)

- உலகில் மிகக் கடினமான குடியுரிமை சட்டங்களில் ஒன்று.
- 20–30 ஆண்டுகள் வாழ்ந்தாலும் குடியுரிமை கிடைக்காது.
- அரபு வம்சாவளி அல்லது நாட்டுக்கு விசேஷ சேவை செய்தால் மட்டுமே கிடைக்கும்.
2. சவுதி அரேபியா (Saudi Arabia)

- பிறப்பு மூலம் குடியுரிமை கிடைக்காது.
- மிக ஆராயனமான தேர்வு முறைகள்.
- மிக உயர்ந்த திறன் கொண்டவர்கள் அல்லது அரச பரிந்துரை உள்ளவர்களுக்கு மட்டுமே அனுமதி
3.கத்தார் (Qatar)

- 25 ஆண்டுகள் வாழ்ந்தாலும் குடியுரிமை உறுதி இல்லை.
- அரபு பின்புலம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை.
- ஏனைய குடியேற்றக்காரர்கள் வாழ்நாளில் குடியுரிமை பெறுவது அரிது.
4.யுஏஇ (UAE)

- பொதுவான வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு குடியுரிமை கிடையாது.
- “Golden Visa” இருந்தாலும் அது குடியுரிமையாகாது.
- சிறப்பு துறைகளில் சாதனை செய்யும் நோபல், விஞ்ஞானி, முதலீட்டாளர், கலைஞர் போன்றவர்களுக்கு மிக அரிதாக வழங்கப்படும்.
5.ஜப்பான் (Japan)

- மொழி, கலாச்சாரம், சமூக இணைவு எல்லாம் மிகவும் கடினம்.
- இரட்டை குடியுரிமை இல்லை.
- 5–10 ஆண்டுகள் வாழ்ந்தாலும் குடியுரிமை கிடைக்கும் என உறுதி இல்லை.
6.சுவிட்சர்லாந்து (Switzerland)

- குடியுரிமை பெற கீழே உள்ள 3 நிலைகளை கடக்க வேண்டும் :
- உள்ளூராட்சி அங்கீகாரம்.
- கட்டான் (State) அங்கீகாரம்.
- கூட்டாட்சி (Federal) அங்கீகாரம்.
- 10 ஆண்டுகள் குடியிருப்பு, அதோடு சமூக ஒத்துழைப்பு சோதனைகள்.
7.ஆஸ்திரியா (Austria)

- பொதுவாக இங்கு குடியுரிமை பெற 10 வருடம் வாழ வேண்டும்.
- “Special merits” அடிப்படையில் சிலருக்கு மட்டுமே குடியுரிமை.
- இரட்டை குடியுரிமைக்கு அனுமதி இல்லை.
8.சீனா (China)

- உலகில் மிகவும் குறைவான வெளிநாட்டவர்களுக்கு மட்டுமே குடியுரிமை.
- அரசு பரிந்துரை இல்லாமல் குடியுரிமை கிடையாது.
- இரட்டை குடியுரிமை முழுமையாக தடை.
9.லிச்சென்ஸ்டைன் (Liechtenstein)

- 30 வருட குடியிருப்பு அவசியம்.
- குடியுரிமை வழங்க மக்கள் வாக்கெடுப்பு (Referendum) நடத்தப்படும்.
- பயங்கரமாக கடினமான நிபந்தனை விதிக்கப்படும்.
10.வத்திக்கான் சிட்டி (Vatican City)

- உலகில் மிக அரிதான குடியுரிமை முறை.
- தேவாலயத்தில் உயர் பதவிகளில் பணிபுரிவோருக்கே குடியுரிமை.
- பொதுவான குடிமக்களுக்கு கிடையாது.
தற்பொழுது இந்தியாவில் ஒரு வெளிநாட்டு நபர் குடியுரிமை பெற, அவருக்கு என்ன தகுதி இருக்க வேண்டும் என்பதை பற்றி பார்ப்போம்.

- இந்தியாவில் 12 வருடம் வசித்திருக்க வேண்டும் (Naturalisation).
- நல்ல நடத்தை இருக்க வேண்டும் அதோடு எந்த குற்றமும் அவரின் பெயருக்கு பின்னால் இருக்கக்கூடாது.
- இந்திய கலாச்சாரம் அடிப்படை அறிவு.
- முன்னாள் நாட்டின் citizenship-ஐ ரத்து செய்ய வேண்டும்.
- இந்திய அரசின் approval (Security clearance) கட்டாயம் இருக்க வேண்டும்.
- இந்தியர் ஒருவரை திருமணம் செய்திருந்தால், திருமணம் செய்த இந்திய நபருடன் இணைந்து 7 ஆண்டுகள் இங்கு இந்தியாவில் வசித்து இருந்தால் அவருக்கு குடியுரிமை வழங்கப்படும்.
