H-1B விசா விண்ணப்பதாரர்களை தீவிர விசாரணைக்கு உட்படுத்த டிரம்ப் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளிலிருந்து அதிக அளவில் ஆட்களை நியமிக்கும் அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு இந்த விசாக்கள் மிக முக்கியமானவை. கடந்த ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் டொனால்ட் டிரம்பிற்கு ஆதரவாக இந்த நிறுவனங்களின் தலைவர்கள் பலர் தங்கள் ஆதரவை வழங்கினர். அமெரிக்காவில் பணியாற்றும் வெளிநாட்டினருக்கு எச்1பி விசா வழங்கப்பட்டு வருகிறது.
முன்னதாக, கடந்த செப்டம்பரில் , அமெரிக்க முதலாளிகள் சிறப்புத் துறைகளில் வெளிநாட்டு தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்த அனுமதிக்கும் H-1B விசாக்களுக்கான விண்ணப்பக் கட்டணத்தை டிரம்ப் நிர்வாகம் 100,000 டாலர்களாக உயர்த்தியது குறிப்பிடத்தக்கது.
இந்தநிலையில், எச்1பி’ விசா விண்ணப்பதாரர்களை தீவிர விசாரணைக்கு உட்படுத்த டிரம்ப் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. ராய்ட்டர்ஸ் அறிக்கையின்படி, அமெரிக்க வெளியுறவுத்துறையின் உள் குறிப்பாணை , H-1B விசா விண்ணப்பதாரர்களை சரிபார்ப்பதற்கான புதிய விதிகளை வகுத்துள்ளது, அதில் பேச்சு சுதந்திரத்தை “தணிக்கை” செய்வதில் ஈடுபடும் எவரும் நிராகரிக்கப்படுவதற்கு பரிசீலிக்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
இது தொடர்பான அனைத்து அமெரிக்க தூதரகங்களுக்கும் மெமோ ஒன்று அனுப்பி வைக்கப்பட்டு இருக்கிறது. அதில் ஹெச்1பி விசா விண்ணப்பங்களை ரத்து செய்வதற்கென புதிய காரணங்கள் சேர்க்கப்பட்டிருப்பதாக ராய்ட்டர்ஸ் செய்தி குறிப்பிட்டு இருக்கிறது. குறிப்பாக அனைத்து நாடுகளிலும் இருக்கக்கூடிய அமெரிக்க தூதரகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள உத்தரவில் ஒரு நபர் ஹெச்1 பி விசா வேண்டி விண்ணப்பம் செய்கிறார் என்றார் என்றால் அவருடைய ரெஸ்யூம் மற்றும் அவருடைய லிங்குடின் புரோபைலை ஆய்வு செய்ய வேண்டும் என குறிப்பிட்டு இருக்கிறார்கள்.
அவர் மற்றும் அவருடன் பயணம் செய்யக்கூடிய நபர்கள் இதற்கு முன்பு என்ன வேலை செய்து கொண்டிருந்தார்கள் என ஆய்வு செய்ய வேண்டும். போலியான தகவல்களை பரப்புவதை தடுப்பது, ஃபேக்ட் செக்கிங் உள்ளிட்ட துறைகளில் வேலை செய்திருக்கிறார்களா என ஆய்வு செய்ய வேண்டுமாம். அவ்வாறு ஆய்வு செய்யும்போது குறிப்பிட்ட அந்த நபர் அமெரிக்காவில் உள்ள பேச்சு சுதந்திரத்திற்கு எதிரான செயல்பாடுகளில் ஈடுபட்டிருந்தால் அவரின் விசாவை ரத்து செய்வது குறித்து பரிசீலனை செய்யலாம் என குறிப்பிட்டு இருக்கிறது.
அனைத்து விசா விண்ணப்பதாரர்களுக்குமே இந்த விதி பொருந்தும் குறிப்பாக ஹெச்1பி விசா வில் அமெரிக்காவுக்கு வரக்கூடியவர்கள் டெக்னாலஜி துறையிலும் சோசியல் மீடியா மற்றும் நிதி சேவை சார்ந்த துறைகளிலும் வேலை செய்வதால் கண்டிப்பாக அவர்களின் பின்புலத்தை ஆய்வு செய்ய வேண்டும் என குறிப்பிட்டு இருக்கிறது.
