வெனிசுலா மீதான டிரம்பின் நடவடிக்கை அமெரிக்காவுக்கு பாதுகாப்பானதல்ல என முன்னாள் துணை அதிபர் கமலா ஹாரிஸ் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக கமலா ஹாரீஸ் தனது எக்ஸ் தளத்தில், வெனிசுலா அதிபர் மதுரோ ஒரு மிருகத்தனமான, சட்டவிரோத சர்வாதிகாரி என்பது இந்த நடவடிக்கை சட்டவிரோதமானது மற்றும் விவேகமற்றது என்ற உண்மையை மாற்றாது. இந்த படத்தை நாங்கள்  முன்பே பார்த்திருக்கிறோம். எண்ணெய் வளத்தை கைப்பற்றுவதற்கான போரில் பாதிக்கப்போவது என்னவோ அமெரிக்க மக்கள் தான். எண்ணெய் மற்றும் தனிப்பட்ட அதிகாரத்திற்காக டிரம்ப் அரசு இந்த நடவடிக்கையைத் தொடர்ந்துள்ளது.

https://x.com/KamalaHarris/status/2007619471893045662

அமெரிக்க மக்கள் இதை விரும்பவில்லை, அவர்கள் பொய்களை கேட்டு அவர்கள் சோர்வடைந்துள்ளனர். இது போதைப்பொருள் அல்லது ஜனநாயகம் பற்றியது அல்ல. இது எண்ணெய் மற்றும் ஒரு பிராந்திய பலசாலியாகக் காட்டிக்கொள்ளும் டொனால்ட் டிரம்பின் விருப்பத்தை கொண்டது.

அவருக்கு இதில் அக்கறை இருந்திருந்தால், தண்டனை பெற்ற போதைப்பொருள் கடத்தல்காரரை அவர் மன்னித்திருக்க மாட்டார் அல்லது மதுரோவின் கூட்டாளிகளுடன் ஒப்பந்தங்களைத் தொடரும்போது, வெனிசுலாவின் சட்டப்பூர்வமான எதிர்க்கட்சியை ஓரங்கட்டியிருக்க மாட்டார் என்று கூறியுள்ளார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version