ஈரானுடன் நடத்தி வரும் போரால் அமெரிக்காவுக்கு ரூ. 2 லட்சத்து 35 ஆயிரம் கோடி செலவாகியுள்ளதாக ராணுவத் தலைமையகமான பென்டகன் தெரிவித்துள்ளது.
இஸ்ரேலுக்கு ஆதரவாக களமிறங்கிய அமெரிக்கா ஈரானுடன் தொடர்ந்து போர் நடத்தி வந்தது. இந்த நிலையில் அமெரிக்கா போர் நிறுத்தம் அமலில் இருப்பதாக அறிவித்து, கடந்த 11ஆம் தேதி பாகிஸ்தானில் அமெரிக்கா மற்றும் ஈரான் தரப்பு பேச்சுவார்தை மேற்கொண்டது.
ஈரானின் அணு ஆயுத திட்டங்கள் உள்ளிட்ட பல் வேறு அம்சங்களில் உடன்பாடு எட்டப்படாததால், பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது. இதனால் ஈரானின் துறைமுகங்கள் உள்பட ஒட்டுமொத்த கடற்பகுதியையும் அமெரிக்கா முற்றுகையிட்டுள்ளது, ஈரானுக்கு கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது. எனினும் லெபனானில் சமீபத்தில் இடைக்கால போர் நிறுத்தம் அமல்படுத்தப்பட்டதால் ஹார்முஸ் நீரிணையை கடந்த 17-ந்தேதி முழுமையாக ஈரான் திறந்தது.
இந்த நிலையில், அமைதி பேச்சுக்காக தற்காலிக போர் நிறுத்தப்பட்டுள்ள நிலையில், ஈரான் போரினால் அமெரிக்காவிற்கு இதுவரை 25 பில்லியன் டாலர் அதாவது இந்திய மதிப்பில் 2 லட்சத்து 35 ஆயிரம் கோடி ரூபாய் செலவாகியுள்ளதாக பென்டகனின் தற்காலிக கணக்காய்வாளர் ஜூல்ஸ் ஹர்ஸ்ட் கூறியுள்ளார். போர் விமானங்கள் மற்றும் விமானங்கள், டிரோன்கள் மற்றும் ரேடார்கள் உள்ளிட்ட பல்வேறு அமெரிக்க ராணுவ சொத்துக்கள் கடுமையாக சேதம் அடைந்திருந்தாலும்,. ஈரான் அணு ஆயுதத்தைப் பெறாமல் இருப்பதை உறுதி செய்வதே முக்கியம் எனவும் அவர் கூறியுள்ளார்..
