செங்கோட்டை முதல் காஷ்மீர் காடுகள் வரை இந்தியாவை தாக்கியுள்ளதாக பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் முன்னாள் ‘பிரதமர்’ என அறியப்படும் பாகிஸ்தான் அரசியல் பிரமுகர் சவுத்ரி அன்வர் உல் ஹக் தெரிவித்துள்ளார்.
இந்தியாவுக்கு எல்லை தாண்டிய பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்குகிறது பாகிஸ்தான். இந்தச் சூழலில் கடந்த ஏப்ரலில் நடந்த பஹல்காம் தீவிரவாத தாக்குதல் மற்றும் அண்மையில் டெல்லி – செங்கோட்டையில் நடந்து கார் குண்டு வெடிப்பு தற்கொலை படை தாக்குதலை சுட்டிக்காட்டி சவுத்ரி அன்வர் உல் ஹக் பேசியுள்ளார்.
