Close Menu
    What's Hot

    ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்ட நிதியை விடுவியுங்கள்!. பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்!

    திமுகவில் வரலாற்று மாற்றம்!. மாணவரணி செயலாளராக முதல்முறையாக பெண் நியமனம்!.

    குட் நியூஸ்!. தங்கம் விலை அதிரடி சரிவு!. சவரன் ரூ.1.20 லட்சத்திற்கு கீழ் இறங்கியது!

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»உலகம்»“புதிய ஈரான் தலைவரையும் அழிப்போம்”!. இஸ்ரேல் பகிரங்க எச்சரிக்கை!.
    உலகம்

    “புதிய ஈரான் தலைவரையும் அழிப்போம்”!. இஸ்ரேல் பகிரங்க எச்சரிக்கை!.

    Editor web3By Editor web3March 4, 2026No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    israel warnig iran new leader
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் கூட்டுத் தாக்குதலில் ஈரானின் உச்ச தலைவர் ஆயத்துல்லா அலி கமேனி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, மேற்காசியாவில் பதற்றம் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில், கமேனிக்குப் பிறகு ஈரானின் அடுத்த உச்ச தலைவராகப் பொறுப்பேற்கும் எவரும் இஸ்ரேலின் இலக்காகவே இருப்பார்கள் என்று அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் பகிரங்கமாக எச்சரித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள கருத்து உலக நாடுகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    இஸ்ரேலை அழிக்கத் துடிக்கும் ஈரானிய பயங்கரவாத ஆட்சியால் நியமிக்கப்படும் எந்தவொரு தலைவரும் பாதுகாப்பாக இருக்க முடியாது. அவர் யாராக இருந்தாலும், எங்கு பதுங்கியிருந்தாலும் அவரை அழிப்பதே எங்களின் நோக்கம்” என்று இஸ்ரேல் காட்ஸ் தெரிவித்துள்ளார். மேலும், அமெரிக்காவுடன் இணைந்து ஈரானின் ராணுவக் கட்டமைப்புகளைத் தகர்க்கும் ‘ஆபரேஷன் லயன்ஸ் ரோர்’ (Operation Lion’s Roar) திட்டத்தின் கீழ் இதற்கான பணிகளை மேற்கொள்ள இஸ்ரேலிய ராணுவத்திற்கு  உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

    இந்த மிரட்டல்களுக்கு மத்தியிலும், ஈரானின் அடுத்த உச்ச தலைவரைத் தேர்ந்தெடுக்கும் பணிகளை அந்நாட்டின் உயர்மட்டக் குழுவான ‘அசெம்பிளி ஆஃப் எக்ஸ்பர்ட்ஸ்’  தீவிரப்படுத்தியுள்ளது. கமேனியின் மகனான முஜ்தபா கமேனி அடுத்த தலைவராகப் பொறுப்பேற்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படும் நிலையில், இஸ்ரேலின் இந்த எச்சரிக்கை போரை இன்னும் மோசமான நிலைக்குக் கொண்டு செல்லும் என்று அஞ்சப்படுகிறது. ஈரானின் பல்வேறு நகரங்களில் இன்றும் இஸ்ரேல் தனது வான்வழித் தாக்குதல்களைத் தொடர்ந்து நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

    இஸ்ரேல் – அமெரிக்கா இணைந்து நடத்திய வான்வழி மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களால் ஈரானில் மட்டும் 1,097 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்த உயிரிழப்பு 1,164 ஆக உயர்ந்துள்ளது. லெபனானில் 40 பேர், இஸ்ரேலில் 11 பேர், ஈராக்கில் 2 பேர், குவைத், ஐக்கிய அரபு அமீரகம் ஆகியவற்றில் தலா 3 பேர், பஹ்ரைன் மற்றும் ஓமனில் தலா ஒருவர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleபேட் கம்மின்ஸ் பாணியில் இந்தியாவுக்கு சவால் விடுத்த சாம் கரன்!.
    Next Article திமுக கூட்டணியில் காங்கிரஸுக்கு 28+1 சீட்!. தொகுதி பங்கீடு கையெழுத்து!.
    Editor web3
    • Website

    Related Posts

    ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்ட நிதியை விடுவியுங்கள்!. பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்!

    March 13, 2026

    திமுகவில் வரலாற்று மாற்றம்!. மாணவரணி செயலாளராக முதல்முறையாக பெண் நியமனம்!.

    March 13, 2026

    குட் நியூஸ்!. தங்கம் விலை அதிரடி சரிவு!. சவரன் ரூ.1.20 லட்சத்திற்கு கீழ் இறங்கியது!

    March 13, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்ட நிதியை விடுவியுங்கள்!. பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்!

    திமுகவில் வரலாற்று மாற்றம்!. மாணவரணி செயலாளராக முதல்முறையாக பெண் நியமனம்!.

    குட் நியூஸ்!. தங்கம் விலை அதிரடி சரிவு!. சவரன் ரூ.1.20 லட்சத்திற்கு கீழ் இறங்கியது!

    அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்!. ‘பவர்ஃபுல்’ பொறுப்பு வழங்க இபிஎஸ் திட்டம்!.

    போர் பதற்றம்!. 90 நாடுகளில் பெட்ரோல் விலை உயர்வு!. உலகப் பொருளாதாரம் முடங்கும் அபாயம்?

    Trending Posts

    அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்!. ‘பவர்ஃபுல்’ பொறுப்பு வழங்க இபிஎஸ் திட்டம்!.

    March 13, 2026

    திமுகவில் வரலாற்று மாற்றம்!. மாணவரணி செயலாளராக முதல்முறையாக பெண் நியமனம்!.

    March 13, 2026

    போர் பதற்றம்!. 90 நாடுகளில் பெட்ரோல் விலை உயர்வு!. உலகப் பொருளாதாரம் முடங்கும் அபாயம்?

    March 13, 2026

    எங்கள் தீவுகளை தாக்கினால்; ” பாரசீக வளைகுடாவில் ரத்த ஆறு ஓடும்”!. ஈரான் கடும் எச்சரிக்கை!

    March 13, 2026

    ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்ட நிதியை விடுவியுங்கள்!. பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்!

    March 13, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.