Close Menu
    What's Hot

    எண்ணெய்க் கப்பல் மீது அமெரிக்கா தாக்குதல் ; இந்தியா கண்டனம்

    கரையும் அதிமுக; திமுகவில் இணைந்தார் முன்னாள் அமைச்சர் பெஞ்சமின்

    திருச்சியில் 14 வயது பள்ளி சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை –  திருமணமான இளைஞர் போக்சோவில் கைது

    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram YouTube RSS
    TN Talks
    • Home
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • அரசியல்
    • LIFESTYLE
    • தேர்தல் 2026
    TN Talks
    Home»தமிழ்நாடு»ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்ட நிதியை விடுவியுங்கள்!. பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்!
    தமிழ்நாடு

    ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்ட நிதியை விடுவியுங்கள்!. பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்!

    Editor web3By Editor web3March 13, 2026No Comments3 Mins Read
    Share Facebook Twitter Pinterest WhatsApp Telegram LinkedIn Email Copy Link
    Follow Us
    Facebook X (Twitter) Instagram YouTube
    modi stalin small 1733202531
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Copy Link WhatsApp

    ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை உடனடியாக விடுவிக்க பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

    அதில், தமிழ்நாட்டில் கிராமப்புறங்களில் நிலையான மற்றும் சம அளவில் குடிநீர் வழங்குவதை உறுதி செய்திட ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை உடனடியாக விடுவிக்கவும், ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டத்திற்கு (கட்டம்-3) ஒப்புதலையும், நிதியுதவியையும் வழங்கிட வேண்டுமென்றும் கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

    அந்த கடிதத்தில், “தமிழ்நாட்டிலுள்ள அனைத்துப் பகுதிகளுக்கும் பாதுகாப்பான மற்றும் நம்பகமான குடிநீர் வழங்குவதில் தமிழ்நாடு தொடர்ந்து முன்னணியில் உள்ளது எனப் பெருமிதத்துடன் குறிப்பிட்டுள்ள மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், கிராமப் பகுதிகளிலுள்ள 1.25 கோடி வீடுகளில், 1.12 கோடி வீடுகளுக்கு செயல்பாட்டில் இருக்கும் குழாய்கள் மூலம் இணைப்புகளை வழங்கி, ஜல் ஜீவன் திட்டத்தில் தமிழ்நாடு பெருத்த முன்னேற்றத்தைச் சாதித்துள்ளதாகவும், இதற்கிடையில் இந்த இயக்கத்தினை மேலும் விரிவாக்க ஒன்றிய அரசு எடுத்துள்ள முடிவினை தாம் வரவேற்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

    ஜல் ஜீவன் மிஷன் இயக்கத்தின் முதல் கட்டத்தில், தமிழ்நாடு 45 புதிய பல கிராமங்களை உள்ளடக்கிய கூட்டுக் குடிநீர்த் திட்டங்களையும், 56 பழைய கூட்டுக் குடிநீர்த் திட்டங்களையும் மற்றும் 21,258 ஒற்றை கிராமத் திட்டங்களையும் மொத்தமாக 18,123 கோடி ரூபாய் செலவில் எடுத்துள்ளதாகவும், அவற்றில் அனைத்து ஒற்றை கிராம குடிநீர்த் திட்டங்கள், பல கிராமங்களை அடக்கிய 101 கூட்டுக் குடிநீர்த் திட்டங்கள் மற்றும் பழைய குடிநீர்த் திட்டங்களில் புனரமைப்புத் திட்டங்களாக 92 திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும் மகிழ்ச்சியோடு தனது கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

    மீதமுள்ள 9 கூட்டுக் குடிநீர்த் திட்டங்கள் நடைமுறையில் முன்னேற்றத்தில் உள்ளன என்று தெரிவித்துள்ள மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், ஆனால், ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் ஒன்றிய அரசின் பங்கு என ரூபாய் 5,914 கோடி மட்டுமே விடுவிக்கப்பட்டுள்ளதாகவும், ரூபாய் 3,112 கோடி நிலுவையில் உள்ளதாகவும், 2024–25 ஆண்டுக்காக தமிழ்நாட்டிற்கு ரூபாய் 2,434 கோடி ஒதுக்கப்பட்ட போதிலும், ரூ.732 கோடி மட்டுமே விடுவிக்கப்பட்டுள்ளதாகவும், 2024 செப்டம்பர் முதல் எந்த நிதியையும் ஒன்றிய அரசிடமிருந்து தமிழ்நாடு அரசு பெறவில்லை என்றும் தனது கடிதத்தில் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

    ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் குடிநீர்த் திட்டங்களில் பணிகளின் முன்னேற்றத்தை நிலைநாட்டுவதற்கும், உரிய காலத்தில் இந்தத் திட்டத்தினை நிறைவேற்றுவதை உறுதி செய்வதற்கும் தமிழ்நாடு அரசு தனது சொந்த நிதியிலிருந்து 2,550 கோடி ரூபாயை விடுவித்துள்ளதாகத் தெரிவித்துள்ள முதலமைச்சர் அவர்கள், நடைமுறையில் உள்ள ஜல் ஜீவன் மிஷன் திட்டங்களின் நிறைவேற்றத்தை உறுதி செய்திட ஏதுவாக நிலுவைத் தொகையான 3,112 கோடி ரூபாய் நிதியை உடனடியாக விடுவிக்க, தாமதமின்றி இந்தியப் பிரதமர் அவர்கள் தலையிட வேண்டுமென்று கேட்டுக் கொண்டுள்ளார்.

    மேலும் ஜப்பான் பன்னாட்டு நிதியுதவியுடன் செயல்படுத்த உத்தேசிக்கப்பட்ட ஒகேனக்கல் (கட்டம்-3) கூட்டுக் குடிநீர்த் திட்டம் தொடர்பாக இந்தியப் பிரதமரின் கவனத்திற்குக் கொண்டு வந்துள்ள முதலமைச்சர் அவர்கள், இந்தத் திட்டம் ரூ.8,428 கோடி செலவில் செயல்படுத்திட ஜல் சக்தி அமைச்சகத்தின் மாநிலத் திட்ட அனுமதி குழுவில் 15.06.2023 அன்று அனுமதிக்கப்பட்டதாகவும், அதில் ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் ஒன்றிய அரசின் பங்காக ரூ.2,283 கோடி அனுமதிக்கப்பட்டது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

    ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் ஒன்றிய அரசால் வழங்கப்பட்ட உறுதியின் அடிப்படையில், தமிழ்நாடு அரசு இத்திட்டத்தில் முன்னெடுப்புப் பணிகளை தொடங்கியதாகவும், ஆனால் ஒன்றிய குடிநீர் மற்றும் கழிவுநீர் சுத்திகரிப்புத் துறை, இத்திட்டத்தினை நீட்டிக்க அனுமதி பெறும் வரை, ஒன்றிய அரசின் உதவியை தற்போது வழங்க இயலாது எனக் குறிப்பிட்டுள்ளதாகவும், இந்த முக்கியமான திட்டத்திற்கு இந்தக் கட்டத்தில் ஒன்றிய அரசு தனது ஆதரவிலிருந்து பின்வாங்குவது என்பது, கிருஷ்ணகிரி மற்றும் தருமபுரி மாவட்டங்களில் மக்களுக்குப் போதுமான குடிநீர் வழங்குவதை பாதிக்கும் என வருத்தத்துடன் முதலமைச்சர் தனது கடித்தில் குறிப்பிட்டுள்ளார்.

    ஒன்றிய அரசின் சமீபத்திய ஜல் ஜீவன் திட்டத்தினை விரிவாக்கம் செய்யும் முடிவினைக் கருத்தில் கொண்டு, ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டத்திற்கு (கட்டம்-3) ஒப்புதலையும், நிதியுதவியையும் வழங்கிட வேண்டுமென்று கேட்டுக் கொண்டுள்ள அவர், அப்போதுதான் தமிழ்நாடு அரசு ஜப்பான் பன்னாட்டு முகமையுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தினை தொடர இயலும் என தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார். அதோடு, கூடுதலாக 10 புதிய கூட்டுக் குடிநீர்த் திட்டங்களை சுமார் 7,590 கோடி ரூபாய் செலவில் செயல்படுத்திட திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ள முதலமைச்சர் இதில் திண்டுக்கல், நாமக்கல், திருச்சி, கரூர், திருவள்ளூர், புதுக்கோட்டை, மயிலாடுதுறை, தென்காசி, தூத்துக்குடி, திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்டங்கள் உள்ளடக்கியுள்ளதாகவும், இந்தப் புதிய கூட்டுக் குடிநீர்த் திட்டங்களுக்கு ஜல் ஜீவன் 2.0 திட்டத்திற்கு நிதி ஒப்பளிப்பு செய்திட வேண்டுமென்று கோரியுள்ளார்.

    தமிழ்நாட்டில் கிராமப்புறங்களில் நிலையான மற்றும் சம அளவில் குடிநீர் வழங்குவதை உறுதி செய்திட ஏதுவாக, ஒன்றிய அரசு தனது ஆதரவை தொடர்ந்து ஆதரவு அளிக்கும் என நம்பிக்கை தெரிவித்துள்ள முதலமைச்சர் அவர்கள், இவ்விஷயத்தில் இந்தியப் பிரதமர் அவர்களின் ஆதரவினையும், விரைவான தலையீட்டினையும் எதிர்பார்ப்பதாக தனது கடிதத்தில் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

    Share. Facebook Twitter WhatsApp Telegram LinkedIn Pinterest Tumblr Email Copy Link
    Previous Articleதிமுகவில் வரலாற்று மாற்றம்!. மாணவரணி செயலாளராக முதல்முறையாக பெண் நியமனம்!.
    Next Article பெரும் துயரம்!. நிலச்சரிவில் சிக்கி 107 பேர் பலி!. 57 உடல்கள் மீட்பு!
    Editor web3
    • Website

    Related Posts

    கரையும் அதிமுக; திமுகவில் இணைந்தார் முன்னாள் அமைச்சர் பெஞ்சமின்

    June 10, 2026

    திருச்சியில் 14 வயது பள்ளி சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை –  திருமணமான இளைஞர் போக்சோவில் கைது

    June 10, 2026

    டெல்லியில்  முதலமைச்சர் ஜோசப் விஜய் ; குடியரசுத்  தலைவர், சோனியா காந்தி உள்ளிட்டோருடன் சந்திப்பு

    June 10, 2026
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Ads
    ADS
    Latest Posts

    எண்ணெய்க் கப்பல் மீது அமெரிக்கா தாக்குதல் ; இந்தியா கண்டனம்

    கரையும் அதிமுக; திமுகவில் இணைந்தார் முன்னாள் அமைச்சர் பெஞ்சமின்

    திருச்சியில் 14 வயது பள்ளி சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை –  திருமணமான இளைஞர் போக்சோவில் கைது

    டெல்லியில்  முதலமைச்சர் ஜோசப் விஜய் ; குடியரசுத்  தலைவர், சோனியா காந்தி உள்ளிட்டோருடன் சந்திப்பு

    புகை ஓவியத்தில் பாரதிராஜாவுக்கு தீபாஞ்சலி  – கோவை கலைஞரின் வித்தியாச இரங்கல்

    Trending Posts

    “துரோகங்களை முறியடித்து அதிமுக மீண்டும் எழும்!” – எடப்பாடி பழனிசாமி  உறுதி

    June 2, 2026

    தமிழக அரசியலில் பெரும் அதிர்வு: பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்..!! புதிய அரசியல் பாதை?

    June 2, 2026

    வழக்கை எதிர்கொள்ளுங்கள் ; காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

    June 2, 2026

    எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சியில் உயிரிழப்பு – அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய கேள்வி

    June 2, 2026

    பாஜகவில் இருந்து விலகுகிறாரா அண்ணாமலை? டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தை?..!

    June 2, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp Telegram RSS
    • Home
    • About us
    • Privacy Policy
    • Terms and Conditions
    • Contact us
    © 2026 TN Talks.

    Type above and press Enter to search. Press Esc to cancel.